பூமிக்கு 16 அடி ஆழத்தில் உள்ள ஆலயம்: மெய்சிலிர்க்க வைக்கும் செவ்வாய் பலன் தரும் செம்பு முருகன்
பொதுவாக ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் ஆதிக்கம் நன்றாக இருந்தால் அவர்களுக்கு தேவையானது அவர்களின் கை தேடி வரும்.
உதாரணமாக பதவி, வேலை, சந்தோசம், பொறுப்பு,சொத்து, சுகங்கள் என்பவற்றை கூறலாம்.
அந்த வகையில், செவ்வாய் பலத்தை பெறுவதற்கான ஆலயமாக பாதாள செம்பு முருகன் ஆலயம் பார்க்கப்படுகின்றது.
திண்டுக்கல் அருகே உள்ள இந்த ஆலயத்தில் ஸ்ரீ பைரவர் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கிறார். இவரை வழிபாட்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
மேலும் இந்த ஆலயத்தில் கருங்காலி மாலைகள் வழங்கப்படுகின்றன.
இதனால் பக்தர்கள் அதிகமாக வந்து செல்வார்கள். அத்துடன் இங்கு சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இப்படி பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் வேறு என்னென்ன சிறப்புக்கள் இருக்கின்றன? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பாதாள செம்பு முருகன் சிறப்பு
பாதாள செம்பு முருகன் கோயில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் -ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் கருவறை பூமியிலிருந்து 16 அடி ஆழத்தில் உள்ளது. அங்கு முருகன் வீற்றிருப்பார். இதன் காரணமாகவே இவரை “பாதாள செம்பு முருகன்” என அழைக்கிறார்கள். கோயில் உள்ளே 18 இறங்கி செல்ல வேண்டும்.
ஆலயத்தின் முன்புறமாக கிழக்கு பார்த்தப்படி சங்கிலி கருப்புசாமி காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார்.
இங்கு கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
அதே வேளை கருங்காலி வேல், சந்தன வேல் உள்ளிட்டவைகளை பக்தர்கள் முருகனுக்கு அணிவித்து பூஜை செய்வார்கள்.
இங்கிருந்து எடுத்து செல்லும் கருங்காலி மாலை அணிவதால் நாம் இழந்த சந்தோசம், சொத்து, பெயர், புகழ் என்பவை தானாக தேடி வரும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |