பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள்
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவதுண்டு. ஆனால் சிலர் இப்பொழுது காலில் ஒரு மெட்டிக்கு பதிலாக இரண்டு மூன்று அணிகின்றனர்.அப்படி அணிவதால் நம்முடைய கணவருக்கு ஆரோக்கியம் வளர்ச்சி ,உடல் பாதிப்படைய கூடும்.
மேலும், கர்ப்பமான பெண்கள் கோயிலுக்கு .செல்வதுண்டு அப்படி கோயிலுக்கு செல்லும் பொழுது உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு கர்ப்ப காலத்தில் அவர்கள் செல்வதை தவிர்த்து விட வேண்டும்.
திருமணமான பெண்கள் உச்சந்தலையில் குங்குமம் வைத்து கொள்வது உண்டு .அப்படி பெண்கள் உச்சந்தலையில் குங்குமம் வைக்கும் பொழுது கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவம் மத்தியிலும் உச்சந்தலையிலும் வைத்து கொள்ள வேண்டும் .
மேலும் ,நாம் தினமும் காலையில் வீட்டின் வாசலில் கோலம் இடுவது வழக்கமாக வைத்திருப்போம். அப்படி பெண்கள் காலையில் எழுந்து கோலமிடும் போது தெற்கு பார்த்து நின்று கொண்டு கோலமிடுவது நன்மையை தரும் .மேலும் அம்மாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் இடுவதை தவிர்த்து விட வேண்டும்
கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் பொழுது சில நேரத்தில் நமக்கு பூக்கள் தருவது உண்டு . அப்படி பூக்கள் தரும் பொழுது பெண்கள் அதை தலையில் வைத்து கொள்வார்கள். ஆனால் கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.
நாம் விசேஷ நாட்களில் வீட்டில் பல வகையான உணவுகளை செய்வோம் .அப்படி வெள்ளிக்கிழமைகளிலும் பிற விசேஷச பண்டிகை நாளில் பாகற்காய் சமைக்க கூடாது .அவ்வாறு செய்வதால் பாவங்கள் வந்து சேரும் என்கின்றனர் .
தினமும், இரவு தூங்கும் போது மனதிற்கு இதமான இசை தெய்வீகம் சம்பந்தப்பட்டமான காட்சிகளை பார்த்துவிட்டு தூங்கினால் அமைதியான உறக்கமும் இரவில் எதிர்மறையான கனவுகள் வருவதிலிருந்து நல்ல தூக்கம் கொள்ளலாம்