இந்த 3 மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்களாம்
மனிதர்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான குணங்களில் இந்த தந்திரமும் ஒன்று. தந்திரமானவர்கள் பெரும்பாலும் சுயநலமானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மிகத் தந்திரமாக அவர்களுடைய வேலையை பிறரிடம் இருந்து எப்படியாவது எடுத்துக் கொள்வார்கள்.
அப்படியாக ஜோதிடத்தில் எண் கணிதப்படி குறிப்பிட்ட சில மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் எப்பொழுதும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.
பிப்ரவரி:
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் அன்பாக பழகி நட்பு பாராட்டுபவர்கள். இருந்தாலும் இவர்களிடம் தந்திரமான குணம் அவ்வப்போது வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். ஒரு பிரச்சனை வந்து விட்டால் கட்டாயமாக இவர்கள் பின் வாங்குவதில்லை. அதை எவ்வளவு சாதுரியமாக போராடி ஜெயிக்க வேண்டும், தந்திரமாக எப்படி கையாள வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிந்தவர்கள்.
மே:
மே மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே அவ்வளவாக எல்லோரிடத்திலும் பேச மாட்டார்கள். ஆனால் இவர்கள் நடப்பதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு நபராக இருப்பார்கள். சமயங்களில் இவர்கள் அமைதியே தந்திரமாக இருக்கலாம். எந்த காரியத்தை எப்படி முடிக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு ஆலோசித்து செய்யக் கூடியவர்கள். அதேபோல் ஒன்றை நினைத்து விட்டார்கள் என்றால் தன்னுடைய தந்திரமான சிந்தனையை கொண்டு அதை எப்படியாவது நிறைவேற்றி விடுவார்கள்.
அக்டோபர்:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் எல்லோரிடத்திலும் சமமாக பழகக்கூடிய தன்மை கொண்டவர்கள். இருப்பினும் இவர்களுடைய சம நிலைக்கு பின்னால் ஒரு தந்திரம் இருப்பதையும் நாம் பார்க்கலாம். அதிகமான அரசியல் பார்வையும் சிந்தனையும் மிக்கவர்களாக இருப்பார்கள். உணர்ச்சிகளை கையாள்வதில் இவர்கள் வல்லவர்கள் எவ்வளவு பெரிய இக்கட்டான நிலை இருந்தாலும் அது கோபம் கொள்ளாமல் கையாளும் தந்திரம் இவர்களிடம் இருக்கும். இந்த தந்திரமே இவர்களுக்கு வெற்றியை தேடி கொடுக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







