இந்த மந்திரத்தை தினமும் சொன்னால் நினைத்த எதையும் சாதிக்கலாம் - முயற்சி செய்து பாருங்கள்
சிவபெருமானின் ஒரு வடிவமாக இருக்கக்கூடியவர் கால பைரவர். இந்த கால பைரவர் என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவபெருமானை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் விலகுகிறது. காலபைரவரை தொடர்ந்து வழிபாடு செய்யும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் நடக்கிறது.
மேலும் எவர் ஒருவர் காலபைரவர் உடைய மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் நினைத்ததை நடத்திக் கொடுப்பார். அப்படியாக நாம் நம்முடைய வாழ்க்கையில் சில பலன்களைப் பெற சொல்ல வேண்டிய காலபைரவருடைய மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
சகல செல்வங்களும் பெற:
கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்
க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்
லோகமோஹலோபதைன்ய கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம்
நீதி கிடைக்க:
பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே
பாவங்கள் அழிய:
அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலம் உக்ரசாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே
வேண்டுவன கிடைக்க:
பானுகோடி பாஸ்வரம் பவாப்தி காரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே
மரணபயம் நீங்கிட:
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்
வ்யாலக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகி ப்ருந்த வந்தனம் திகம்பரம்
காசிகா புராதிநாத காலபைரவர் பஜே
மோட்சம் கிடைக்க:
புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே.
இந்த மந்திரத்தை தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம், வீடுகளில் ஒலிக்கச் செய்யலாம். இந்த மந்திரங்களை நாம் உச்சரிப்பதாலும் இந்த மந்திரங்களை நாம் செவிகளால் கேட்பதாலும் நமக்கு மன தைரியம் அதிகமாகிறது.
எதையும் துணிந்து செய்யும் நம்பிக்கை பிறக்கிறது. அதை போல் நம்முள் நாம் அறியாத மிகப் பெரிய நேர்மறை ஆற்றல் நமக்குள் உருவாகிறது. எவரும் நம்மை நெருங்க முடியாத ஒரு தெய்வ சக்தி நம்மை காக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







