விநாயகர் சதுர்த்தி: 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வதால் நடக்கும் அற்புதங்கள்

By Sakthi Raj Aug 25, 2025 05:23 AM GMT
Report

  மனிதர்களுடைய வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளையும் தோஷங்களையும் விலக்கக் கூடியவர் விநாயகப் பெருமான். விநாயகரை நாம் முழுமுதற் கடவுளாக போற்றி வழிபாடு செய்து வருகின்றோம்.

அதாவது நம் வீடுகளில் எந்த ஒரு முக்கிய காரியங்கள் செய்தாலும் அல்லது ஒரு சாதாரண விஷயங்களை தொடங்க வேண்டும் என்றாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்துதான் அந்த செயலை செய்வோம். காரணம் விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று தொடங்கும் காரியம் எதுவும் தடையின்றி நடக்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

இந்த மந்திரத்தை தினமும் சொன்னால் நினைத்த எதையும் சாதிக்கலாம் - முயற்சி செய்து பாருங்கள்

இந்த மந்திரத்தை தினமும் சொன்னால் நினைத்த எதையும் சாதிக்கலாம் - முயற்சி செய்து பாருங்கள்

 

அப்படியாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகின்றோம். அதாவது ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தியை விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகின்றோம்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று வர இருக்கிறது. அன்றைய தினத்தில் விநாயகப் பெருமானுக்கு 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் எதிர்பாராத பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் பெறலாம் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி: 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வதால் நடக்கும் அற்புதங்கள் | 21 Leaves Worshiping For Lord Ganesha In Tamil

1. முல்லை இலை :

இந்த இலை கொண்டு நாம் விநாயகப் பெருமானை பூஜிக்கும் பொழுது நம் மனதில் அறம் வளர்கிறது.

2. கரிசலாங்கண்ணி இலை :

இந்த இலை கொண்டு நாம் பூஜை செய்யும் பொழுது நம்முடைய குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பெறலாம்

3. வில்வம் :

வில்வ இலை கொண்டு பூஜை செய்யும் பொழுது நம்முடைய மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறுகிறது

4. அறுகம்புல் :

அறுகம்புல் கொண்டு பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. இவ்வாறு நாம் செய்யும் பொழுது நமக்கு விநாயகப் பெருமானின் அருளால் முகப்பொலிவும் வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கிறது

5. இலந்தை இலை:

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இந்த இலை கொண்டு பூச்சி செய்யலாம்

6. ஊமத்தை இலை:

மனதில் நல்ல எண்ணம் உருவாகும்

7. வன்னி இலை :

இந்த இலை கொண்டு நாம் பூஜை செய்யும் பொழுது நாம் இருந்தாலும் மறைந்தாலும் நமக்கு புகழ் கிடைக்கும்.

8. நாயுருவி :

இந்த பூஜை கொண்டு செய்யும் பொழுது நம்முடைய முகம் வசீகரமாகவும் நல்ல பொலிவும் அழகும் கிடைக்கும்.

9. கண்டங்கத்தரி இலை :

இந்த இலை கொண்டு பூஜை செய்தால் நம் மனதில் வீரமும் தைரியமும் கிடைக்க பெறுவோம்

10. அரளி இலை :

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்

11. எருக்கம் இலை :

இந்த இலை கொண்டு பூஜை செய்தால் கருவில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடும் குறைவின்றையும் பிறக்கும்

12. மருதம் இலை :

நீண்ட நாட்கள் குழந்தைக்காக காத்திருப்பவர்கள் கட்டாயம் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த இலை கொண்டு பூஜை செய்தால் விநாயகரின் அருளால் குடும்பத்தில் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

13. விஷ்ணுகிராந்தி இலை :

அறிவில் சிறந்து விளங்கும் பாக்கியம் கிடைக்கும்

14. மாதுளை இலை :

இந்த இலை கொண்டு பூஜை செய்தால் சமுதாயத்தில் பெயரும் புகழும் நிலைத்திருக்கும்

15. தேவதாரு இலை :

வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களை எதிர்த்து போராடக்கூடிய தைரியம் பிறக்கும்

16. மருக்கொழுந்து இலை :

இந்த இலை கொண்டு பூஜை செய்யும் பொழுது கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்வார்கள்

17. அரசம் இலை :

இந்த இலை கொண்டு பூஜை செய்தால் கட்டாயம் நினைத்த உயர் பதவியும் வாய்ப்புகளும் நம்மை தேடி வரும்

18. ஜாதிமல்லி இலை :

இந்த இலை கொண்டு பூஜை செய்தால் சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் உருவாக்கி கொடுப்பார்

19. தாழம் இலை :

வீட்டில் குறைவின்றி செல்வ வளம் பெருகும்

20. அகத்தி இலை :

இந்த இலை கொண்டு பூஜை செய்யும் பொழுது நீண்ட நாட்களாக சிக்கி தவிக்கும் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்

21. செண்பகம் இலை :

இந்த இலையை கொண்டு பூஜை செய்தால் விநாயகரின் அருளால் கட்டாயம் நல்ல வாழ்க்கை துணை அமைவார்கள்  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US