பகவத் கீதை: வலி தான் வாழ்க்கையின் மிகப் பெரிய பாடம்? ஏன் தெரியுமா?
இந்துக்களில் மிகப்பெரிய காவியமாகவும் ஒரு சிறந்த வாழ்க்கை பாடமாகவும் போற்றி படிக்கக் கூடியது பகவத் கீதை. பகவத் கீதையில் ஒரு மனிதன் அவன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று அழகாக நமக்கு எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.
அப்படியாக ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த பாடம் அவன் எதிர்பாராத தாங்கிக் கொள்ள முடியாத வலியின் வழியாகத்தான் வருகிறது. பகவத் கீதை அதை பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
பகவத் கீதையில் வலி தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய பாடம் என்கிறது. மனிதன் சந்திக்கும் அவனுடைய இக்கட்டான நிலை அவனை உடைப்பதற்கு அல்ல மாறாக அவனை கண் விழிக்க செய்து வாழ்க்கையை வாழ வைப்பதற்கே என்கிறது.
மேலும் கீதை சொல்கிறது ஒருவர் சந்திக்கும் நிற்கதியான நிலை தான் அவன் எவ்வளவு வலிமையானவன் என்று அவனுக்கு உணர்த்துகிறது. மகாபாரதப் போரில் அர்ஜுனன் மிகவும் பயத்துடனும் பதட்டத்துடனும் இருந்தான். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவன் அனுபவிக்கும் வலியில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
கிருஷ்ணர் அர்ஜுனனிற்கு நம்மை எதிர்க்கும் வலியின் முன் எவ்வாறு போராடி நிற்க வேண்டும் என்று உணர்த்துகிறார். கீதை சொல்கிறது ஒரு மனிதனுடைய வளர்ச்சி என்பது அவனுடைய கஷ்டங்களை கடந்து செல்வது அல்ல, மாறாக அதனை உடைக்க முடியாத மன வலிமையாக்குவதே ஆகும் என்கிறது.
இங்கு பெரும்பாலான மனிதர்கள் ஏதேனும் ஒரு துன்பம் என்றால் அதில் இருந்து ஓட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த நொடியில் இருந்து எப்படியாவது நான் தப்பித்து விட வேண்டும் என்று பல முயற்சிகளை செய்கிறார்கள்.
ஆனால் கீதை சொல்கிறது ஒரு மனிதன் தன்னுடைய கஷ்டங்களை தாங்க முடியாத வலியை எந்த ஒரு தடையில்லாமல் உணர்ந்து அனுபவித்து அது கற்பிக்கும் பாடத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது.
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும் அவருடைய முன்னேற்றத்திற்கும் கஷ்டங்கள் கொடுக்கும் வலி ஒரு மிகப்பெரிய பாடமாகவும் ஆசிரியராகவும் இருக்கிறது. மேலும் கஷ்டங்களை அனுபவிப்பது என்பது ஒரு மனிதனுடைய இயல்பு.
அந்த வலி ஒரு மனிதனை ஆன்மீக பாதையிலும் மாயை உலகில் இருந்தும் விடுவித்து உண்மையை அறிய செய்கிறது. அதனால் கஷ்டம் என்பது ஒரு மனிதனை உடைக்க கூடிய ஒரு செயல் அல்ல அது அந்த மனிதனை வெற்றி பெற தயாராக்கும் ஒரு பாடசாலை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







