சாணக்கிய நீதி: இந்த 3 மனிதர்களிடமிருந்து கட்டாயம் விலகியே இருக்க வேண்டுமாம்
சாணக்கியர் என்பவர் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் போதித்தவர். ஒரு மனிதனுடைய இல்வாழ்க்கையில் தொடங்கி திருமணம் வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இவை அனைத்தும் எவ்வாறு அமைய வேண்டும் என்று அவர் மிக சரியாக நமக்கு சில அறிவுரைகளை கூறுகிறார்.
அதை பின்பற்றி நடக்கும் பொழுது நம் வாழ்க்கையில் வெற்றியை அடையலாம். அந்த வகையில் சாணக்கியர் வாழ்க்கையில் கட்டாயம் இந்த மூன்று மனிதர்களிடமிருந்து மட்டும் நம் விலகியே இருக்க வேண்டும் என்கிறார். அவர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
1. ஒரு மனிதனின் முக்கியமான நபராக அவர்களுடைய துணை இருக்கிறார்கள், அப்படியாக ஒரு மனிதனுடைய மனைவி அல்லது கணவன் சரியாக அமையாவிட்டால் அவர்கள் வாழ்க்கை மிகவும் நரகத்திற்கு உள்ளாகிவிடும். அந்த வகையில் நம் துணையால் சில சங்கடங்களும் சில அவமானங்களும் நமக்கு நேருகிறது என்றால் அந்த உறவை பரிசீலனை செய்து தொடர்வது நன்மை தரும் என்கிறார்.
2. அதேபோல் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஆசிரியரும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நல்ல ஆசிரியரை ஒரு மாணவன் பெற்று விட்டால் அவன் சிறந்த மனிதனாக உருவெடுக்கிறான். அதுவே ஆசிரியர் சரியான நிலையில் அமையாவிட்டால் அவர்களுடைய தெளிவில்லாத போதனையாலும் அவர்களுடைய எதிர்மறை ஆற்றலாலும் அந்த மாணவன் திசை தடுமாறி போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆதலால் ஆசிரியராகவே இருந்தாலும் சரியான முறையில் தேர்வு செய்து அவர்களிடம் பயணம் செய்வது அவசியம் ஆகும் என்கிறார்.
3. குடும்பம் என்றால் கட்டாயம் அதில் ஆயிரம் உறவுகள் இருக்கும். எந்த ஒரு உறவு நம்மை அவமரியாதையாகவோ நம்மை ஏளனமாகவோ நடத்துகிறார்களோ அவர்கள் நமக்கு எவ்வளவு பயன்படுபவராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







