உங்கள் பிறந்த எண் இதுவா? நிதி நிலை குறித்து எச்சரிக்கும் எண்கணிதம்!
பொதுவாக நமது வாழ்வின் அனைத்து விடயங்களுடனும் எண்கள் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. எண்கள் ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தவும் முடியும்; அதேபோல் வீழ்ச்சியடையச் செய்யவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
எண்கணிதம் என்பது ஒருவரின் பெயர், பிறந்த தேதி, மாதம், ஆண்டு மற்றும் அவற்றின் கூட்டுத்தொகையால் பெறப்படும் எண்ணிற்கும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை நிகழ்வுகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்து விளக்கும் ஒரு பண்டைய சாஸ்திர முறையாக அறியப்படுகிறது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் பணம் சம்பாதிப்பதற்கு ரொம்பவும் சிரமப்படுவார்களாம். கடினமாக உழைத்தாலும் பணத்தை சேதிக்கவே முடியாதாம். அப்படிப்பட்ட எண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 4

ஒரு மாதத்தின் 4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணின் அதிபதியாக ராகு கருதப்படுகிறார்.
எண் 4-க்கு உரியவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடலாம் என்று எண்கணிதம் கூறுகிறது.
கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன் தாமதமாகக் கிடைக்கக்கூடும். பொருளாதார ரீதியாக ஏற்றத் தாழ்வுகள் அடிக்கடி ஏற்படலாம். பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் கூடுதல் முயற்சி தேவைப்படும். மேலும், குடும்ப வாழ்க்கையிலும் சில நேரங்களில் மனநிறைவு குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எண் 7

ஒரு மாதத்தின் 7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். இந்த எண்ணின் அதிபதியாக கேது கருதப்படுகிறார்.
எண் 7-க்கு உட்பட்டவர்கள் உழைப்பில் குறைவில்லாதவர்களாக இருந்தாலும், அவர்களின் முன்னேற்றம் மெதுவாக அமையக்கூடும்.
சொத்து மற்றும் குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். பண வரவு இருந்தாலும், அதை நீண்டகாலம் தக்க வைத்துக்கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம்.
கடன் சுமைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக, இவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
எண் 8

ஒரு மாதத்தின் 8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 8 ஆகும். இந்த எண்ணின் அதிபதியாக சனி பகவான் கருதப்படுகிறார்.
எண் 8-க்கு உரியவர்கள் வாழ்க்கையில் கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
இவர்களின் வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.பொருளாதார நிலைமை ஒரே மாதிரியாக இல்லாமல் ஏற்றத் தாழ்வுகளுடன் போராட வேண்டிய நிலை காணப்படும்.