இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ராஜ வாழ்க்கை வாழ்வாங்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிக நம்பிக்கையாக பின்பற்றக்கூடிய விஷயமாகும். அப்படியாக ஒருவர் பிறந்த எண்கள் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையும்? அவர்களுடைய தொழில் எப்படி இருக்கும்?என்று எண் கணிதம் கொண்டு கணித்து விடலாம்.
அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு 3 எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ராஜ யோகத்துடன் வாழ்வார்களாம். அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

(எண் 9 ):
அதாவது என் 9, 18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அவர்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்போடு வாழ்வார்களாம். இவர்களுக்கு அவ்வளவு எளிதாக பண கஷ்டம் என்பது வருவது இல்லை. மேலும் இவர்கள் சமுதாயத்தில் ஒரு பெயரும் புகழையும் சம்பாதித்து இருப்பார்கள்.
அது மட்டும் இல்லாமல் இந்த எண்ணில் பிறந்தவர்கள் அவர்களின் பிடிவாத குணத்தை படிப்பில் காண்பித்து அவர்கள் படிப்பில் அதிக அளவில் வெற்றி பெறுவதை நாம் பார்க்கலாம். அதோடு பல நேரங்களில் இவர்களுடைய பிடிவாதத்தை நல்ல முறையில் பயன்படுத்தி இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள்.
மேலும், இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக விருப்பம் காட்டுவார்கள். இவர்களிடம் எதையும் சாதிக்கும் திறனும் தைரியமும் தன்னம்பிக்கையும் சற்று அதிகமாக காணப்படும். இவர்கள் எப்பொழுதும் உழைப்பில் இருந்து ஓய்வெடுப்பதை விரும்ப மாட்டார்கள். ஆதலால் இவர்களுக்கு பண கஷ்டம் என்பது வருவதில்லை.
தன்னை எப்பொழுதும் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிக உழைப்பை போடக்கூடிய நபராக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த எண்ணில் பிறந்த நபர்களுக்கு இந்த எண்ணிற்குரிய யோகம் இவர்களுக்கு எப்பொழுதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆதலால் இவர்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழக்கூடிய நபராக சமுதாயத்தில் இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |