இந்த தேதியில் பிறந்தவர்கள் செம ஜீனியஸாக இருப்பார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய வகையாகும். இந்த எண் கணிதம் கொண்டும் நாம் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அதாவது ஒருவருடைய பிறந்த தேதியை வைத்து அவருடைய எதிர்கால வாழ்க்கை, அவருடைய குண நலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் இந்த எண் கணிதம் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
அப்படியாக குறிப்பிட்ட ஒரு சில எண்ணில் பிறந்தவர்கள் பிறவியிலே செம ஜீனியஸாக இருப்பார்களாம். இவர்களிடம் போட்டியிட்டால் யாரும் அவ்வளவு எளிதாக ஜெயிக்க முடியாது என்கிறார்கள். அவர்கள் யார் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.
எண் 3:
எண் கணிதத்தில், 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதீத அறிவாற்றல் கொண்டவராக இருப்பார்களாம். இவர்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறையே வித்தியாசமாகவும் பலரை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். அதேபோல் ஒரு பிரச்சனை என்றால் இவர்களுடைய அறிவு திறனை பயன்படுத்தி இவர்கள் எளிதாக வெளியில் வருவதையும் நாம் பார்க்க முடியும். படிப்பில் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்களாம். அதேபோல் இவர்கள் வாதத்தை வைக்கும் பொழுது அடுத்தடுத்து அறிவார்ந்த செயல்களை பேசி எதிர் தரப்பினரை வாயடைத்து போக செய்யும் அளவிற்கு நுணுக்கமான அறிவாற்றல் பெற்றிருப்பார்களாம்.
எண் 7:
எண் கணிதத்தில் 7. 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி துறையில் அதிக ஈடுபாடு செலுத்துபவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பலரும் விஞ்ஞானி ஆவதற்கு அனைத்து ஆற்றலும் பெற்றிருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவதோடு இவர்களுடைய அறிவாற்றலால் இவர்கள் சமுதாயத்தில் பெயரும் புகழும் பெற்றிருப்பார்கள். இவர்கள் ஒரு இடத்தில் தலைமைத்துவ பண்புடன் செயல்படுவார்கள். இவர்கள் இருக்கும் இடம் அனைத்தும் பெரிய அளவில் வெற்றியை பெற்று விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







