இந்த கிழமையில் பிறந்தவங்க ஆளுமையுடன் இருப்பார்களாம்.. நீங்க பிறந்த கிழமை என்ன?
By DHUSHI
ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த நேரம் மற்றும் கிழமை இரண்டும் கணக்கிடப்படுகிறது.
இதனை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு தெய்வத்தை குறிக்கிறது.
பிறந்த கிழமைக்கு ஏற்ற தெய்வத்தை வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏழு கிழமைகளில் பிறந்தவர்களுக்கு ஏற்ற தெய்வங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை | ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். துணிச்சல் இருப்பதால் தந்தைவழி உறவினர்கள் மீது மிகுந்த மரியாதையை கொண்டிருப்பார்கள். சூரியனை வழிபடுவதால் அரச மகிழ்ச்சியையும் புகழையும் பெறுவார்கள். |
திங்கட்கிழமை | திங்கட்கிழமை பிறந்தவர்கள் குணத்தில் இனிமையானவர்களாக இருப்பார்கள். அமைதி மற்றும் இரக்கம் இவர்களிடம் வலுவாக இருக்கும். மனதளவில் வலிமையானவர்கள், உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்க்கையை விரும்பாது, எளிமையாக வாழ ஆசைப்படுவார்கள். தலைமை தெய்வங்கள் சிவன் மற்றும் பார்வதியை வழிபடுவார்கள். |
செவ்வாய்கிழமை | செவ்வாய் கிழமை பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியமானவர்கள் மற்றும் வலுவான ஆளுமை இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். தளபதி மற்றும் தலைவராக இருப்பார்கள். கனவுகள் பல காண்பார்கள். இவர்களின் தொழில் பெரும்பாலும் நிலம் அல்லது சொத்து தொடர்பானவையாக இருக்கும். |
புதன்கிழமை | புதன்கிழமை பிறந்தவர்கள் திறமையானவர்கள், கூர்மையானவர்கள் மற்றும் பேசுவதில் திறமையானவர்களாக இருப்பார்கள். பேசும் பொழுதும் எழுதும் பொழுது தன்னுடைய முழு திறமையை போடுவார்கள். அவர்களின் சிறந்த தரம் அவர்களின் நிதி நுண்ணறிவு. இவர்களின் அதிபதி ஸ்ரீஹரி விஷ்ணு. விஷ்ணுவை வழிபடுவது செல்வத்தையும் அந்தஸ்தையும் தரும். |
வியாழக்கிழமை | இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவுத் தாகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் குருக்களாக, ஆலோசகர்களாக, ஆசிரியர்களாக அல்லது மதத் தலைவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் நல்ல மதிப்பு |
வெள்ளிக்கிழமை | வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளைகள் நிலையற்றவர்களாக இருப்பார்கள். தீராத காதல் மற்றும் அழகு அவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். மகிழ்ச்சியைப் பின்தொடர்வதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். அன்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை பற்றிய ஈர்ப்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும். |
சனிக்கிழமை | சனிக்கிழமை பிறந்த குழந்தைகள் ஆரம்ப வாழ்க்கையில் பலத்தரப்பட்ட கஷ்டங்களை அனுபவிப்பார்கள். வெற்றி, அந்தஸ்து இவை இரண்டும் கடின உழைப்பால் மாத்திரமே கிடைக்கும். வருமான ஆதாங்கள் நிறைய வர வாய்ப்பு உள்ளது. தலைமை தெய்வம் யமராஜா. யம பூஜை வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும் நல்ல கர்மாவையும் தருகிறது. |
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |