இந்த எண்ணில் பிறந்தவர்கள் 35 வயதில் விஐபி ஆவது உறுதி
வாழ்க்கையில் நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நடந்து விடுவதில்லை. ஒவ்வொருவருக்கும் பிறந்த நேரம், காலம், நட்சத்திரம், ராசி இவை எல்லாம் அவர்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான நேரம் வரும் பொழுது நிச்சயம் அவர்களுக்கான வெற்றி அவர்களுக்கு கிடைக்கும்.
அப்படியாக எண் கணிதத்தில் குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் நிச்சயம் 35 வயதிற்கு மேல் அவர்கள் மிகப்பெரிய உயரத்தையும் தொழில் ரீதியாக ஒரு சிறந்த மனிதராகவும் வெற்றி பெற்ற ஒரு நபராகவும் சமுதாயத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

எண் 3:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் கலை ரசனை கொண்டவர்கள். இவர்களுடைய உணர்வுகளை இவர்கள் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்கள். மேலும் இவர்கள் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உடனடியாக சாதனை அடைவதில்லை.
அதிலும் குறிப்பாக மூன்று 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நிச்சயம் 35 வயதிற்கு மேல் அவர்கள் யாரும் அசைக்க முடியாத ஒரு வெற்றியை அடைந்து நம்பர் ஒன் ஆக வாழ்வார்கள்.
எண் 4:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஒரு விஷயம் செய்யும் முன் அதை தீவிரமாக யோசித்து பலமுறை ஆலோசனை செய்த இவர்கள் செய்வார்கள் . மேலும் இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக கேது பகவான் இருக்கிறார்.
கேது பகவான் ஒரு மனிதனை தீர ஆராய்ந்து பிறகு செய்யக்கூடிய ஒரு தன்மையை கொடுக்கக் கூடியவர். ஆக இவர்கள் எந்த விஷயங்களை செய்வதாக இருந்தாலும் மெதுவாக செயல்பட்டு பின்பு அவர்கள் ஒரு நிலையான வெற்றியை அடைவார்கள்.
எண் 8:
அதாவது என் 8, 17, 26 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் நிச்சயம் 35 வயதுக்கு மேல் சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கக் கூடிய ஒரு நபராகவும் எல்லாராலும் அறியக்கூடிய ஒரு நபராகவும் தொழில் ரீதியாக உயர்ந்த நிலைக்கு சென்று விடுவார்கள்.
இந்த எண்ணை ஆளக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். ஆக முதலில் இவர்களுக்கு நிறைய தடைகளையும் தாமதத்தையும் வாழ்க்கை பாடத்தையும் கற்றுக் கொடுத்த பிறகு இவர்களுக்கு ஒரு நிலையான வெற்றியை 35 வயதுக்கு மேல் இவர்கள் கைகளில் கொடுக்கிறார்.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் போட்டி என்று வந்துவிட்டால் அதில் இவர்கள் கலந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். அதாவது இவர்கள் எதை செய்தாலும் நிதானமாக தனக்கு நானே ராஜா என்ற ஒரு முறையை இவர்கள் இயங்க வேண்டும் என்று எண்ண கூடியவர்கள்.
ஆக இவர்கள் யாரு எவ்வாறு சென்றாலும் பரவாயில்லை நான் என்னுடைய பாதையில் சரியாக மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பிறகு அதில் ஒரு மிக உயரத்தை அடைவேன் என்ற ஒரு எண்ணம் கொண்டதால் படிப்படியாக முன்னேறி 35 வயது இவர்கள் ஒரு உயர்ந்த நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |