2026-ல் 12 ராசிளும் இந்த விஷயங்களில் மட்டும் மிக கவனமாக இருக்க வேண்டுமாம்
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு இன்னும் ஒரு வாரத்தில் பிறக்க இருக்கிறது. அப்படியாக ஜோதிட ரீதியாக ஒவ்வொருவரும் தங்கள் ராசிக்கு வருகின்ற புத்தாண்டு எவ்வாறு அமைய இருக்கிறது என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியாக ஒரு சிலர் இந்த புத்தாண்டில் அவர்கள் என்ன விஷயங்கள் செய்யலாம்? எதை செய்யக்கூடாது? என்று தெரிந்தால் அவர்கள் கவனமாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் 2026 புத்தாண்டில் 12 ராசிகளும் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் சில விஷயங்கள் அவசரமாக முடிவெடுக்க கூடியவர்கள். ஆக 2026 ஆம் ஆண்டு இவர்கள் தொழில், காதல், திருமண வாழ்க்கை என்று எதுவாக இருந்தாலும் அவசரத்தில் எந்த ஒரு உடனடி முடிவையும் எடுக்காமல் இருப்பது அவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
ரிஷபம்:
இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இவர்களுக்கு தடைகளாக இருக்கக்கூடிய குணங்களை இவர்கள் சரி செய்து கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக தங்களை எப்படி முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினால் நல்ல ஆண்டாக அமையும்.
மிதுனம்:
குடும்பமாக இருந்தாலும் சரி வேலை செய்யக்கூடிய இடமாக இருந்தாலும் சரி இவர்களை யாரேனும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும். சுயமாக இவர்களுக்காக வாழ்ந்தால் மட்டுமே இவர்களுடைய வாழ்க்கை இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியாக அமையும்.
கடகம்:
இவர்கள் எப்பொழுதும் அதிகமாக சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த சிந்தனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து குடும்ப வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினால் போதுமானது வெற்றி தேடி வரும்.
சிம்மம்:
நீண்ட நாட்கள் உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தி ஒதுங்காமல் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய கடமைகளை செய்து கொண்டே வர நிச்சயம் அதற்கான அங்கீகாரம் 2026 வருடம் கட்டாயம் கிடைக்கும்.
கன்னி:
எல்லா விஷயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது போல் பிறரும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் வேலையிலும் மட்டும் நீங்கள் முழுமையான கவனம் செலுத்தினாலே ஆண்டு சிறப்பாக அமையும்.
துலாம்:
இந்த 2026 ஆம் ஆண்டு முழுவதும் நீங்கள் உங்களுக்காகவும் உங்களுக்கான மன மகிழ்ச்சிக்காக மட்டுமே நீங்கள் செலவு செய்ய வேண்டும். பிறருடைய தேவைகளையும் மகிழ்ச்சிக்காகவும் நீங்கள் ஒருபோதும் உங்களுடைய தியாகங்களை செய்யாதீர்கள். இது உங்களுக்கான வருடம்.
விருச்சிகம்:
உங்கள் மனதில் இருக்கக்கூடிய வன்மங்கள் அனைத்தையும் பழைய வருடங்களோடு முடித்து விடுங்கள். புதிய வருடத்தை புதிய தொடக்கமாக எடுத்துக்கொண்டு புதிய மனிதராக நீங்கள் மாறினால் மட்டுமே எல்லா வருடமும் உங்களுக்கு சிறப்பாக அமையும்.
தனுசு:
உங்களுடைய உணர்வுகளை உங்களுக்குள் நீங்கள் அடக்கி வைப்பதை நிறுத்தி விடுங்கள். வெளியே சென்று புதிய நண்பர்களுடன் பழக தயாராகுங்கள். மன மகிழ்ச்சியோடு எல்லோரிடமும் பழக முயலுங்கள். நிச்சயம் மாற்றம் உங்களுக்கு கிடைக்கும்.
மகரம்:
நீங்கள் மிகச்சிறந்த உழைப்பாளி என்றாலும் உங்களுடைய கடினமான உழைப்புகளை எந்த இடங்களில் தேவையோ அந்த இடங்களில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள பழகுங்கள். அதோடு வாழ்கையில் வெற்றி பெற புதிய பாதையை அணுகி அதில் பயணம் செய்ய தயாராகுங்கள்.
கும்பம்:
உங்கள் மனதில் இருக்கக்கூடிய எந்த உணர்வுகளையும் மறைத்து பழகாதீர்கள். உடன் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேச முயலுங்கள். உங்களை நீங்களே ஒரு இடங்களில் ஒதுக்கி வைத்துக் கொண்டு எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருப்பதை தவிர்த்தால் தான் நீங்கள் எதிலும் வெற்றி அடைய முடியும்.
மீனம்:
உங்களுடைய உள் உணர்வை நீங்கள் மதிக்க பழகிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் வருகின்ற கடினமான காலங்களில் நீங்கள் தெளிவாக கையாள முடியும். எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதில் உங்களுக்கான ஒரு இடத்தை நீங்கள் விட்டுக் கொடுக்காத நிலையில் இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |