இன்றைய ராசி பலன்(23-12-2025)
மேஷம்:
முடிந்தவரை இன்று வெளியே செல்லும் பொழுது உங்களுடைய பொருட்களில் கவனமாக இருங்கள். காலை முதல் நீங்கள் மிகுந்த பதட்டத்துடன் காணப்படலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை வரலாம். மதியம் மேல் குடும்பத்தில் சந்தித்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் நாள்.
மிதுனம்:
இன்று உங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் உங்களுக்கு ஆலோசனை சொல்வார்கள். வேலை தொடர்பாக ஒரு சிலர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கடகம்:
உங்களை விட்டு பிரிந்த நபர் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். தொழில் ரீதியாக இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். வருகின்ற பிரச்சனையை பக்குவமாக அணுகி வெற்றி பெரும் நாள்.
சிம்மம்:
வீம்புக்காக ஆடம்பர செலவுகளை செய்வார்கள். இதனால் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய மன உளைச்சல் எதிர்காலத்தில் காத்திருக்கிறது. முடிந்தவரை பொறுமையாக இருப்பது நல்லது.
கன்னி:
உங்கள் வீடுகளில் எதிர்பாராத விஷயங்களால் உங்கள் மனம் பதட்டம் அடையலாம். சகோதரர்கள் சொந்த விஷயங்களில் நீங்கள் முடிந்தவரை தலையிடாதீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.
துலாம்:
உங்கள் வேலையில் நீங்கள் முழு கவனம் செலுத்துவதற்காக முயற்சி செய்வீர்கள். சில முக்கியமான நபர்களின் ஆலோசனையால் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். மனதில் தெளிவு பிறக்கும்.
விருச்சிகம்:
வரவு செலவுகளை பற்றி வாழ்க்கை துணையிடம் ஆலோசனை செய்வீர்கள். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நீங்கள் சில முக்கியமான முயற்சிகள் மேற்கொள்வீர்கள். நன்மையான நாள்.
தனுசு:
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு மனதில் நிம்மதியும் உடலுக்கு ஓய்வும் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வழக்கு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.
மகரம்:
இன்று உங்களைப் பற்றி நீங்கள் ஆலோசனை செய்யக்கூடிய நாள். அலுவலகத்தில் முடிந்து வரை அமைதியாக செல்வது நல்லது. வெளி நபர்களிடம் உங்கள் சொந்த விஷயங்களை பகிராதீர்கள்.
கும்பம்:
இன்று நீங்கள் மிகவும் கடினமான உழைப்புகளை போடுவீர்கள். எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை கேட்டு நடப்பார்கள்.
மீனம்:
இன்று உங்களின் கணக்கு வழக்குகளில் நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |