திருமண தாமதம் என்ற கவலையா? நம்பிக்கையோடு இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள்
ஒரு ஆண் பெண் அவர்களுடைய பள்ளி கல்லூரி படிப்பை முடித்து ஒரு நல்ல வேலைக்குச் சென்ற பின் அவர்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ஜாதகத்தில் திருமணம் தொடர்பான நிறைய தடைகளும் தோஷங்களும் இருப்பதை நாம் காணலாம்.
அப்படியாக அவர்கள் திருமண தாமதம் என்று கவலை கொள்ளாமல் இந்த ஒரு வேண்டுதலை அவர்கள் நம்பிக்கையோடு செய்தால் விரைவில் அவர்கள் வீடுகளில் நிச்சயம் நற்செய்தி உண்டாகும். பறவைகளில் அனைவருடைய மனதையும் கவரக்கூடிய விதமான அமைப்பில் இருப்பது கிளி.
இந்த கிளி ஆனது ஆலமரங்களிலும் ஆலயங்களிலும் நாம் அதிக அளவில் பார்க்க முடியும். அப்படியாக நம்முடைய இந்த திருமண தடையை விலக இந்த கிளி தான் நமக்கு தூதுப் போகிறது என்று சொன்னால் நம்பு முடிகிறதா? அதை பற்றி பார்ப்போம்.

தெய்வங்களும் கிளியும்:
தெய்வங்களை எடுத்துக் கொண்டால் அம்பாள்கள் சிலர் கைகளில் இந்த கிளியை ஏந்தி கொண்டு நமக்கு அருள்பாலிப்பதை காணலாம். அப்படியாக மார்கழி மாதத்தில் அந்த மாயக் கண்ணனே வந்து என்னை மணந்து கொள்வான் என்று தீராத நம்பிக்கையோடு மார்கழி முப்பது நாளும் திருப்பாசுரம் பாடி பாவை நோன்பு மேற்கொண்டு பெருமாளை மணமுடித்துக் கொண்ட ஆண்டாள் நாச்சியார் தோளில் இருக்கக்கூடியதும் இருந்த அற்புதமான கிளி தான்.
இந்த கிளி ஆனது ஆண்டாளுக்காக கண்ணனிடமே சென்று தூது சொன்ன கிளி என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஆண்டாள் தோளில் அமர்ந்திருக்கும் கூடிய இந்த கிளியானது பக்தர்களுடைய குறைகளையும் கவலைகளை கேட்டு அவற்றை அப்படியே கண்ணனிடம் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு தூதுவராக இருக்கிறது என்று ஐதீகமாக உள்ளது.

ஆக இந்த கிளியிடம் நாம் மனம் உருகி தமக்கு திருமணம் யோகம் விரைவில் கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்ட நிச்சயம் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கைகளில் இருக்கக்கூடிய இந்த கிளியானது தினமும் புதிதாக உருவாக்கப்படுகிறது.
அதாவது கிளியின் உடலாக மரவள்ளிக்கிழங்கும், மாதுளை பிஞ்சை கொண்டு கிளியின் அலகு மற்றும் அவற்றின் கண்களாக காக்கா பொன், மற்றும் வாழை நார்கொண்டு இணைத்து இந்த தெய்வீக கிளி உருவாகிறது. இந்த பணியை ஒரே ஒரு குடும்பம் பாரம்பரியமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல் மதுரையை ஆளக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமர்ந்திருக்கும் கூடிய ஒரு அற்புதமான பறவையும் இந்த கிளி தான். இந்த கிளிக்கு பின்னால் ஒரு அதிசய வரலாறு இருக்கிறது.

அதாவது ஒரு காலத்தில் பறக்கவே முடியாத ஒரு கிளி மீனாட்சியம்மனை பார்த்து பக்தியுடன் போற்றி துதித்துக் கொண்டிருந்தது. அந்த கிளியின் தூய மனதை உணர்ந்த மீனாட்சியம்மன் "என் தோளில் என்றென்றும் நீ இருப்பாய்" என்று கிளிக்கு ஒரு அபூர்வமான வரத்தை கொடுத்திருக்கிறார்.
ஆக, மதுரை மீனாட்சி அம்மனாக இருக்கட்டும் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கக்கூடிய ஆண்டாள் நாச்சியார் ஆக இருக்கட்டும் இவர்கள் இருவருமே தங்களுடைய பக்தி என்னும் பிடிவாதத்தால் எதையும் சாதிக்க இயலும் என்று நமக்கு எடுத்து காட்டியவர்கள்.
அதனால் இவர்களில் தோளில் இருக்கக்கூடிய அந்த கிளி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று நாம் இப்பொழுது அறியமுடியும். ஆதலால் நீங்கள் இந்த கிளி இடம் அமைதியாக அமர்ந்து பேசி பாருங்களேன்!
அந்த கிளியானது நிச்சயம் உங்களுக்கு தூது செய்து உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் நிச்சயம் உங்களுக்கான துணையை தடைகளை எல்லாம் மீறி உங்களிடம் வந்து சேர்த்து திருமணம் வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |