நீங்கள் பிறந்த தேதி இதுவா? 18 வயதிற்கு மேல் உங்களுக்கு இது நடந்தே தீருமாம்
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினங்களும் பிற உயிர்களுக்கு ஆதாயமாக இருக்கும் படியாக தான் இந்த பிரபஞ்சமானது அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியாக நாம் செய்யக்கூடிய வேலை கூட ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யக்கூடிய ஒரு அமைப்பாக தான் இருக்கிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்களிடம் முகம் தெரியாதவர்கள் கூட வந்து அவர்களுடைய வாழ்க்கை சோக பக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள். அந்த மனிதர்களிடம் மனம் விட்டு பேச முன் வருவார்கள்.
இதற்கு காரணம் அவர்களை அறியாமலே அந்த மனிதர் பிறரை குணப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். ஆதலால் தான் அந்த மனிதர்களை தேடிச் சென்று சிலர் பேசுவதுண்டு. அவர்களிடம் பேசிய பிறகு அவர்கள் மனதில் இருக்கக்கூடிய பாரம் குறைந்து விடுவதை அவர்கள் உணர்வார்கள். அப்படியாக எந்த தேதியில் பிறந்தவர்கள் பிறரை குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவர்கள் என்று பார்ப்போம்.
எண்: 2, 11, 20, 29:
இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகவும் உணர்வு ரீதியாக எல்லா விஷயத்தையும் பார்க்கக் கூடியவர்கள். அதனால் இவர்கள் விலங்குகளாக இருக்கட்டும் மனிதர்களாக இருக்கட்டும், எல்லோரிடத்திலும் உணர்வு ரீதியாக பழகக் கூடியவர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். ஆதலால் இவர்களை தேடி வந்து மனிதர்கள் தங்களுடைய துயரங்களை பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெற்றுக் கொள்வது உண்டு.
எண்: 6, 15, 24:
இந்த தேதியில் பிறந்தவர்கள் பிறருடைய கஷ்டத்தை காது கொடுத்து கேட்கக் கூடிய ஒரு அமைதியும் பொறுமையும் உடையவர்கள். அது மட்டுமல்லாமல் இவர்களால் ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் அவர்கள் பொறுமையாக பிறருடைய குறைகளை கேட்கக்கூடிய தன்மையும் அவர்களுக்காக வருந்தக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. அதோடு இந்த எண்களில் பிறந்தவர்கள் காட்டக்கூடிய அன்பானது ஒருவரை துயரங்களில் இருந்து விடுபட செய்யக் கூடியதாக இருக்கும்.
எண்: 3, 12, 21, 30:
இந்த தேதியில் பிறந்தவர்கள் மிகவும் அறிவாற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு மனிதருக்கு உணர்வு ரீதியாக ஆலோசனை செய்வதை காட்டிலும் அறிவு ரீதியாக இவர்கள் கொடுக்கின்ற ஆலோசனை அந்த மனிதனை மேன்மை அடைய செய்யக்கூடியதாக இருக்கும். ஆதலால் இவர்களை தேடி பலரும் தங்களுடைய சிக்கலான வாழ்க்கையில் இருந்து விடுபட சில ஆலோசனைகளை அவர்களாகவே முன்வந்து கேட்பது உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |