இந்த தேதியில் பிறந்தவர்கள் மிக பெரிய சாதனையாளராக வருவார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் கொண்டு ஒருவருடைய ஆளுமை திறமை மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் அவர்களுடைய திருமண வாழ்க்கை போன்று எல்லாம் விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில எண்ணில் பிறந்தவர்கள் மிகப் பெரிய சாதனையாளராக வருவார்கள். இவர்களை யாராலும் வீழ்த்த முடியாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.
எண் கணிதத்தின் படி 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இரண்டு என்று வரும். மேலும் இவர்கள் மிகப்பெரிய அளவில் கற்பனை திறன் கொண்டவர்களாக காணப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

அதே சமயம் இரக்க குணமும் ஒருவரை புரிந்து கொள்வதில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயற்கையாகவே இவர்களுக்கு எதையும் தேடி படித்துக் கொண்டு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருக்கும்.
எதையும் சமநிலையாக இவர்கள் உள்ள பார்க்கக்கூடிய குணமும் பெற்றிருப்பார்கள். மேலும் இவர்களுடைய அறிவாற்றலும் வாழ்க்கையின் அனுபவங்களும் இவர்களை ஒரு மிகச்சிறந்த ஆளுமை படைத்தவர்களாக இவர்களை பல நேரங்களில் வெளிப்படுத்தும். இவர்கள் ஒரே நிலையில் அமர்ந்து தங்களை முடக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
பல விஷயங்களை தெரிந்து கற்றுக்கொண்டு நிறைய மாற்றங்களை எதிர்கொள்வார்கள். மேலும் இவர்கள் காதல் என்று வரும் பொழுது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் தங்களுடைய துணைக்காக எதையும் செய்யத் துணிபவர்களாகவும் இருக்கிறார்கள்.

மிக முக்கியமாக இவர்கள் பிறருக்கு உதவக்கூடிய குணம் அதிகம் பெற்று இருப்பார்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை அறிவு சார்ந்த நாம் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடியவர்கள்.
மக்களுக்காக முன் நின்று உதவக்கூடிய மனப்பான்மை இருக்கும். இருப்பினும் நெருக்கமானவர்களிடம் இவர்கள் அதிகமாக எதிர்பார்ப்புகள் வைப்பதால் மன கசப்புகளை பெற்று விடுகிறார்கள். மேலும் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட எண் ஆக 1, 2, 3,5 மட்டும் 7 இருக்கிறது. துரதிர்ஷ்ட எண்ணாக 8 உள்ளது. மேலும் இவர்களுடைய அதிர்ஷ்ட நாள் திங்கட்கிழமை, அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை மற்றும் வெளிர் பச்சை இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |