இந்த 7 அறிகுறிகள் இருந்தால் தெய்வம் உங்களுடன் எப்பொழுதும் இருப்பதின் அர்த்தமாம்
இந்த பிரபஞ்சம் என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஆதலால் சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயம் முன்னதாகவே அவர்களுக்கு உள்ளுணர்வாக அவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும்.
அவ்வாறு இருப்பவர்களுக்கு பிரபஞ்சம் எப்பொழுதும் துணை நிற்பதின் அறிகுறி என்று சொல்கிறார்கள். அந்த வகையில் ஒருவருக்கு பிரபஞ்சத்தினுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கிறது என்பதை இந்த ஏழு அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அதை பற்றி பார்ப்போம்.

1. ஒரு முக்கிய விஷயம் செய்ய வேண்டுமென்றால் அவர்களின் உள் உணர்வு அவர்களை வழிநடத்த தொடங்கிவிடும். இவர்கள் சிந்திக்கும் முன் அவர்களுடைய உள்புணர்வு என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தும்.
2. சந்திக்கின்ற எல்லா மனிதர்களிடமும் நீங்கள் எளிதாக பழகிவிட முடியாது. நல்ல மனிதர்களுடைய தொடர்பு மட்டுமே உங்களுக்கு கிடைக்கும், அதே போல் யார் நல்லவர்கள்? கெட்டவர்கள் என்று சரியாக கணித்து செல்லக்கூடிய ஒரு உள் உணர்வும் உங்களுக்கு இருக்கும்.
3. எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள். ஆன்மீகம் பற்றிய சிந்தனை உங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். பிரபஞ்சத்தை மிக தெளிவாகவும் ஆழமாகவும் நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். வாழ்க்கை பற்றிய தேடுதல் அதிகம் இருக்கும்.
4. முகம் தெரியாத நபர்கள் கூட உங்களிடம் பல ஆண்டுகள் நெருங்கி பழகியது போல் பேசுவார்கள். அதே போல் விலங்குகளும், பறவைகளும் உங்களிடம் அன்பு பாராட்டும்.

5. உங்களுக்கு குறிப்பிட்ட சில எண் அவ்வபோது கண்களுக்கு தெரிந்து கொண்டே இருக்கும். உதாரணமாக 11.11 அல்லது 55.55 என்ற எண்கள் நீங்கள் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.
6. நீங்கள் அதிக அளவிலான தனிமையை விரும்புவீர்கள். தனிமையில் உங்களுடன் நீங்கள் நேரம் செலவிட ஆசைப்படுவீர்கள். தேவை இல்லாத பேச்சுகளை பேச விரும்ப மாட்டீர்கள். அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து நேர்மறையான சிந்தனைகளை மனதிற்குள் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.
7. ஒருவரை பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்ட நபர் என்பதை சரியாக எடை போட்டு விடுவீர்கள். அது மட்டும் அல்லாமல் அவர்கள் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறார்களா அல்லது சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறார்களா? உங்களிடம் ஏதாவது மறைத்து பேசுகிறார்கள் என்பதை நீங்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |