களைகட்டிய மீன்பிடி திருவிழா.. குளத்தில் இறங்கிய கிராம மக்கள்- நம்பிக்கையின் வெளிபாடு
மதுரை அருகே உள்ள ஐந்துமுத்தன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு மீன்பிடி போட்டி நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மீன்பிடி திருவிழா
மதுரை - அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பொதுவாக ஐந்துமுத்தன் கோயில் கண்மாயில் உள்ளது.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த கண்மாயிலுக்கு காணிக்கையாக மீன் குஞ்சுகளை பக்தர்கள் போடுவார்கள்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கண்மாயில் உள்ள மீன்களை சமத்துவ முறையில் பக்தர்கள் பிடிப்பார்கள். இதனையே “மீன்பிடி திருவிழா” என அழைக்கப்படுகின்றது.
திருவிழாவின் வெளிபாடு
திருவிழாவின் போது இந்த விடயம் பொது மக்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்படும். இதன் பின்னர் நத்தம், மேலூர், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலையில் கண்மாயில் முன் காத்திருப்பார்கள்.
போட்டி ஆரம்பிக்க முன்னர் ஊர் பெரியவர்கள் ஒன்றாக சேர்ந்து வெள்ளை கொடி அசைப்பார்கள்.
அப்போது போட்டி ஆரம்பிக்கப்பட்டு பக்தர்கள் கட்லா, கெளுத்தி, அயிரை, விரால், ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்களை போட்டியாளர்கள் பிடிப்பார்கள்.
திருவிழா முடிந்த பின்னர் பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்யாமல் குடும்பமாக சேர்ந்து சமைத்து உண்பார்கள். மீன்பிடி திருவிழாவை செய்வதன் மூலம் மழை பொழிந்து விவசாயம் சிறப்பாக நடக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
இந்த திருவிழாவை காண்பதற்காக வெளி ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |