வீட்டில் மறந்தும் இந்த திசையில் கண்ணாடியை வைக்காதீர்கள்
கண்ணாடி என்பது எல்லோருடைய வீட்டிலும் மிக முக்கியமான பொருளாகும்.அப்படியாக வாஸ்து முறைப்படியும் கண்ணாடி மிக முக்கியமான அங்கமாகும்.அந்த முறையில் வீட்டில் கண்ணாடியை வைக்க உரிய திசைகள் உள்ளது.அந்த திசையில் வைத்தால் மட்டும் தான் நாம் முழுமையான பயனை அடையமுடியும்.
மேலும்,கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது.ஆதலால் அதை எப்பொழுதும் சுத்தமாக வைப்பதும் மிக அவசியம்.அப்படியாக நாம் இப்பொழுது வீட்டில் எந்த திசையில் கண்ணாடி வைக்க வேண்டும்.எந்த திசையில் கண்ணாடி வைக்க கூடாது என்று பார்ப்போம்.
பொதுவாக நாம் வீட்டிலும்,வியாபார இடங்களிலும் கண்ணாடி வைப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்கும்.ஆதலால் தான் நம் இந்துசாஸ்திரத்தில் கண்ணாடிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றோம்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட கண்ணாடியை எப்பொழுதும் பகல் நேரத்தில் தான் வாங்கவேண்டும்.ஒருபோதும் இரவில் வாங்க கூடாது. கண்ணாடி நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உணர்ந்து கூடிய சக்திகள் கொண்டது.
வீட்டில் ஏதெனும் தவறு அல்லது கெட்ட நேரம் இருக்கிறது என்றால் கண்ணாடிக்கு அதை உணர்த்தும் சக்திகள் உண்டு.அந்த சமயங்களில் தான் தவறுதலாக கண்ணாடி வீட்டில் உடைவது போன்ற நிகழ்வுகள் நடக்கும்.அந்த வேளையில் நாம் பயம் கொள்ளமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஒருவர் வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு சுவரில் எந்த வகையான கண்ணாடி அல்லது கண்ணாடி ஷோபீஸ் வேண்டுமானாலும் பொருத்தலாம். இந்த திசையில் கண்ணாடியை வைத்தால் வீட்டில் உள்ளவர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
தெற்கு அல்லது மேற்கு சுவர்களில் கண்ணாடி வைப்பதை எப்போதும் தவிர்க்க வேண்டும்.மேலும் வீட்டில் கண்ணாடியை தவறான திசையில் வைக்கும் பொழுது எதிர்பாராத பாதிப்புகள் உருவாகிறது.அதே போல் மறந்தும் நாம் கண்ணாடியை எதிர் எதிர் திசையில் வைக்க கூடாது.வீட்டில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெறுக நாம் டிரஸ்ஸிங் ரூம் மற்றும் கழிவறைக்கு கூடுதலாக, டைனிங் டேபிளுக்கு முன்னால், சாப்பாட்டுப் பகுதியில் ஒரு கண்ணாடியை மாட்டலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் குடும்பத்தினர் இடையே சந்தோசம் நிலவும்.ஆனால் சமயலறையில் நாம் கண்ணாடியை மாட்டி வைக்க கூடாது.படுக்கையறையில் கண்ணாடியை வைத்தாலும், படுக்கையின் பிரதிபலிப்பு தெரியும் இடத்தில் வைக்கக்கூடாது.
சிலருடைய வீட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்குவதில்லை.வீண் செலவுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.அதை தடுக்கும் விதமாக நம்முடைய லாக்கரில் ஒரு கண்ணாடியை வைக்கலாம்.அது செல்வதை அதிகரிக்க செய்யும்.
ஆக இவ்வாறு சரியான முறையில் கண்ணாடியை வைக்கும் பொழுது நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |