முக்கிய நிகழ்வின் பொழுது பெரியவர்களிடம் திருநீறு வாங்குவது ஏன்?
நம் வீட்டில் விசேஷங்கள் நடக்கும் பொழுது, அதில் முக்கிய நிகழ்வு நடந்து முடிந்த பிறகு நாம் முதலாக செய்வது வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து அவர்களிடம் திருநீறு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவது தான்.
இதை தான் காலம் காலமாக வழக்கமாக கொண்டு இருக்கின்றோம். அப்படி ஏன் பெரியவர்களிடம் நாம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் திருநீறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
பெரியவர்கள் அவர்கள் நம்முடைய சொந்தம் என்று சொல்வதை விட அவர்கள் நம்முடைய ஆசிரியர்கள் என்றே சொல்லலாம்.அன்பு கனிவு வாழ்கை படம் நடைமுறைகள் எல்லாம் முதலில் அவர்களிடம் இருந்து தான் கற்று கொண்டு வருகின்றோம்.
மேலும் அவர்களால் தான் நாம் இந்த பூவுலகத்திற்கு வருவதற்கான காரணம். ஆதலால் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பல ஆண்டு காலமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு ஏற்ற தாழ்வு துன்பம் இன்பம் எல்லாம் வாழ்கையில் அனைத்து முடுக்குகளும் உள்ள சூழ்ச்சிகள் அனைத்தும் முடுக்குகளும் இருக்கிற நன்மை தீமைகள் எல்லாம் அறிந்தவர்கள் .
ஆதலால் இத்தனை அனுபவம் நிறைந்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது மிக அவசியம்.
பெரியவர்கள் உண்மைகள் கடவுளுக்கு நிகர்.கடவுள் அருளும் இவர்களின் அருள் ஆசியும் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையில் வளமாக வாழமுடியும்.
பெரியவர்கள் மனதார வாழ்த்தி ஆசிர்வாதம் செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் ஆகின்றது.
அவர்கள் வாழ்த்தும் பொழுது நம் பாவங்களும் கரைந்து போகின்றது.
ஆதலால் வீட்டில் உள்ள அனைவரும் பெரியவர்களை மதித்து நல்ல நாட்களில் முக்கிய நிகழ்வுகளில் கட்டாயம் ஆசிர்வாதம் வாங்கி திருநீறு வைத்து கொள்வது அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |