27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க

By Sakthi Raj Aug 13, 2026 10:10 AM GMT
Report

ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அப்படியாக 27 நட்சத்திரக்காரர்கள் உடைய குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.

அஸ்வினி:

இவர்கள் மிக செல்வந்தராகவும் புத்திசாலியாகவும் விவாதம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

பரணி:

இவர்கள் நன்றி உணர்வுடன் இருக்கக்கூடியவர்கள். திறமைசாலி தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். எதிரிகளை வெல்லக்கூடியவர்கள். வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

கார்த்திகை:

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். படிப்பு அவ்வளவு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் வாழ்கையில் நல்ல வசதிகளோடு வாழ்வார்கள்.

27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க | Personality Traits Of 27 Nakshatra In Astrology

ரோகிணி:

இவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதில் அதிக ஆசைக் கொண்டவர்கள். வசீகரமான தோற்றம் கொண்டிருப்பார்கள். 

மிருகசீரிடம்;

இவர்கள் தைரியமாக செயல்பட கூடியவர்கள். முன்கோபம் அதிகமாக இருக்கும். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் உண்டு.

திருவாதிரை:

எளிமையாக இருப்பார்கள். சாமர்த்திய சாலியாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கக்கூடிய பொறுப்பு உண்டு.

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட பாட வேண்டிய முருகன் மந்திரம்

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட பாட வேண்டிய முருகன் மந்திரம்

ஆயில்யம்:

செல்வந்தராக இருப்பார்கள். அதிக செலவாளியாக இருப்பார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகம்:

இவர்களுக்கு ஆராய்ச்சி மனப்பான்மை அதிகம் இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இனிமையாக பழகக் கூடியவர்கள்.

பூரம்:

மிகவும் ஒழுக்கமானவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். விவசாயத்தில் ஆர்வம் இருக்கும். பேச்சு திறன் உள்ளவர்கள்.

உத்திரம்:

நாணயமாக விளங்க கூடியவர்கள். பக்தி அதிகம் இருக்கும். நட்புடன் பழகக் கூடியவர்கள். 

27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க | Personality Traits Of 27 Nakshatra In Astrology

ஹஸ்தம்:

ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் உண்டு. நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள். தாயின் மீது அதிக அன்பு இருக்கும்.

சித்திரை:

ஊர் சுற்றுவதில் அதிக ஆர்வம் கொள்வார்கள். தைரியசாலியாக இருப்பார்கள். ஒருவர் மீது இரக்க குணம் அதிகம் இருக்கும்.

சுவாதி:

புத்தி கூர்மையானவர்கள். யோசித்து செயல்பட கூடியவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள் நம்பிக்கையானவர்கள்.

விசாகம்:

வியாபாரத்தில் அதிக ஆர்வம் இருக்கும். தற்பெருமை கொண்டவர்கள்.

அனுஷம்:

நேர்மையானவர்கள் அரசியலில் அதிக முன்னேற்றம் உண்டு. துணிச்சலாக செயல்பட கூடியவர்கள். குறும்பு உண்டு. புகழ்மிக்கவர்களாக இருப்பார்கள். 

மூலம்:

சுறுசுறுப்பாக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீதிமானாக இருப்பார்கள். 

பூராடம்:

செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பார்கள். வாக்குவாதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். கடமை செய்வதில் ஆர்வம் உண்டு. 

2026 ஆடிப்பூரம் எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன ?

2026 ஆடிப்பூரம் எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன ?

உத்திராடம்:

தைரியசாலி மற்றும் கலையில் சிறந்த வழங்குவார்கள். பொறுமைசாலி நினைத்ததை சாதிக்க கூடியவர்கள். 

திருவோணம்:

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டு. சமூக சேவை செய்வார்கள். பிறரை மதிக்க கூடிய தன்மை இருக்கும்.

அவிட்டம்:

கம்பீரமானவர்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும். தைரியசாலி முன்கோபம் சற்று அதிகம் வரும் .

சதயம்:

வசீகரமான தோற்றம் உண்டு. செல்வந்தராக இருப்பார்கள். பொறுமையுடன் செயல்படக்கூடியவர்கள். ஒழுக்கமானவர்கள்.

பூரட்டாதி:

மனதில் தைரியம் அதிகம் இருக்கும். பழகுவதற்கு இனிமையாக இருப்பார்கள். குடும்பத்தை நேசிக்கக் கூடியவர்கள்.

உத்திரட்டாதி:

கல்வியில் சிறந்து விளங்குபவர்கள். சாதுரியமாக பேசுபவர்கள். பக்தியில் சிறந்து விளங்குவார்கள். கடமைதவறாதவர்கள்.

ரேவதி:

தைரியசாலியாக இருக்க கூடியவர்கள் மிகவும் நேர்மையாக செயல்படுவார்கள். எதிரியை வெல்லக்கூடியவர்கள். தற்பெருமை அதிகம் பேசக்கூடியவர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US