நாளைய ராசிபலன் (13-08-2026)

Report

மேஷம்:

இன்று தொழில் ரீதியாக முக்கியமான நபர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் புதுவிதமான சந்தோஷம் பிறக்கும்.

ரிஷபம்:

இன்று வேலைக்காக சில அலைச்சல் உண்டாகலாம். கோயில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

மிதுனம்:

வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

கடகம்:

தேவையில்லாமல் கடன் கொடுப்பதையும் வாங்குவது தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனமாக இருப்பது அவசியம். மதியம் மேல் மனசோர்வு விலகும்.

சிம்மம்:

வியாபாரத்தில் திடீர் எதிர்ப்புகளை சந்திக்கலாம். நண்பர்கள் உடைய உதவியால் முக்கியமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். தாய் வழி உறவுகளிடம் கவனமாக பேசுவது அவசியம்.

கன்னி:

காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் நல்ல அனுகூலம் உண்டு.

கணவன் தவறு செய்தாலும் அதை மன்னித்து ஏற்கக் கூடிய மனைவியின் ராசிகள் யார் ?

கணவன் தவறு செய்தாலும் அதை மன்னித்து ஏற்கக் கூடிய மனைவியின் ராசிகள் யார் ?

துலாம்:

இன்று வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் பிறக்கும். எதையும் நேர்மறையாக அணுகுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

விருச்சிகம்:

தொழில் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். குழந்தைகளுக்காக சில செலவுகளை செய்வீர்கள்.

தனுசு:

இன்று உலகத்தைப் பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டாகும். மனதில் நேர்மறையான சிந்தனை பிறக்கும். நெருங்கியவர்களிடம் மனம் விட்டு மகிழ்ச்சியாக பேசுவீர்கள்.

2026: ஆடி அமாவாசை முன்னோர்கள் ஆசி பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்

2026: ஆடி அமாவாசை முன்னோர்கள் ஆசி பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்

மகரம்:

உங்களுக்கு பிடித்த நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்திற்காக திடீர் தொலைதூர பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்:

சொந்த வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனை விலகும். வழக்கு விஷயத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான நபர்களை சந்தித்து முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய அமைப்பு உருவாகும்.

மீனம்:

இன்று உடல் சோர்வு மனசோர்வு காணப்படலாம். தேவை இல்லாமல் அதிகமான வேலைகளை இழுத்து போட்டு செய்து கொள்ள வேண்டாம். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US