நீங்கள் பிறந்த தேதி இதுவா ? இந்த விஷயங்களில் நீங்கள் சிறந்தவராக இருப்பீர்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த எண் கணிதம் வைத்தும் நாம் ஒருவருடைய குணாதிசயங்கள் அவர்களுக்கு உரிய பலம் பலவீனம் என்று அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகைகயில் ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கும் ஒரு சிறப்பான பண்புகள் இருக்கும். அந்த பண்பு பிறருக்கு மிகவும் பிடித்தமானது இருக்கும். அப்படியாக எந்த எண்ணில் பிறந்தவர்களுடைய குணம் பிறரை மிகவும் கவரும் வகையில் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

எண் 1:
எண் ஒன்றில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ஒரு மிகச்சிறந்த ஆளுமை பண்பை கொண்டு இருப்பார்கள். இவர்கள் பிறரை விடவும் தனித்துவமான ஒரு பாதையில் செல்லக்கூடிய நபராக இருப்பார்கள். இவர்களுடைய ஆளுமையை நிறைய மனிதர்கள் விரும்பக்கூடிய தன்மையை பெற்றுக் இருக்கும்.
எண் 2:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் பிறரை அன்பாக பார்த்துக் கொள்வதில் மிகச் சிறந்தவராக இருப்பார்கள். இவர்களுடைய மகிழ்ச்சியே இவர்களுடைய அன்பையும் ஆறுதலையும் பிறருக்கு காண்பிப்பதில் இருக்கிறது என்று இவர்கள் நம்பக் கூடியவர்களாக இருப்பார்கள்.
எண் 3:
இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் பேச்சுத் தன்மை மிகச் சிறப்பாக இருக்கும். இவர்களுடைய பேச்சுத் திறனால் இவர்களை சுற்றி உள்ளவர்களை ஈர்த்து தன் வசப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றலை பெற்றிருப்பார்கள்.
எண் 4:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள். இவர்கள் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளையும் தங்களை நிதானமாக வைத்துக் கொள்ளக்கூடிய நபர்களாக இருப்பதால் அந்த குணமே பிறரை ஈர்க்கக்கூடிய தன்மை பெற்றிருக்கும்.
எண் 5:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடிய தன்மை பெற்றிருப்பார்கள். இவர்களுடைய அன்பான பேச்சு பிறருடைய கவனத்தை பெறக்கூடிய தன்மையை பெற்றிருக்கும்.
எண் 6:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை வெளிக்காட்டிக் கொள்வதிலும் அவர்களை தயார் செய்வதிலும் ஒரு தனித்துவமான பண்பை பெற்றிருப்பார்கள். அந்த குணம் பிறரை கவரக் கூடிய தன்மையை பெற்றிருக்கும்.
எண் 7:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் எல்லோரிடத்திலும் அவ்வளவு எளிதாக பேசக்கூடிய நபராக இருக்க மாட்டார்கள். ஆனால் இவர்களுடைய அமைதியான பண்பே இவர்களை தேடி சென்று அவர்களிடம் பேசக்கூடிய ஒரு ஈர்ப்பு தன்மையை கொடுக்கும்.
எண் 8:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் ஒழுக்கமான நபராக இருப்பார்கள். எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடத்தில் இருக்கும். அந்த எண்ணம் எல்லோராலும் விரும்பக் கூடியதாக அமைந்திருக்கும்.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் தைரியமான மற்றும் நம்பிக்கையான குணத்தை பெற்றிருப்பார்கள். இவர்களுடைய இந்த பண்பானது மிகவும் சக்தி வாய்ந்ததாக சமுதாயத்தில் தெரிவதால் எல்லோரும் இவர்களிடத்தில் நட்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |