மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழரின் உயிர் நாடியும் காலத்தால் அழியாத கலையில் கருவூலமும்!
தமிழ்நாட்டோட அடையாளமே மதுரை தான். அந்த மதுரைக்கு பெருமை சேர்க்க மதுரையின் உயிர்நாடியாக இருக்கிற ஒரு கோயில்னா அது மீனாட்சி அம்மன் கோயில் ஆகும். இது வெறும் கோயில் மட்டும் கிடையாது. இது சுமார் 2500 வருஷங்களுக்கு முன்னாடி இருந்து தமிழரின் கலை, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் எல்லாத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பொக்கிஷம்.
தல வரலாறு:
சங்க காலத்திலேயே மதுரையில் கோயில் இருந்தது என சிலப்பதிகாரம், மணிமேகலை என பழைய தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காலப்போக்கில் பல மாற்றங்கள், படையெடுப்புகள் நடந்தது. ஆரம்ப காலத்தில் கோயிலை வடிவமைத்தவர்கள் பாண்டிய மன்னர்கள். அவர்கள் தான் மதுரையை ஆட்சி செய்தவர்கள்.
அதன் பிறகு ஒரு கஷ்டமான காலக்கட்டம் உருவானது. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் காபூர் படையெடுத்து வந்து கோயிலை எல்லாம் இடித்து சூறையாடினார்கள். இதற்காக தமிழர்கள் சும்மா இருந்துவிடவில்லை. 16-ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த விஸ்வநாத நாயக்கர் மீனாட்சி அம்மன் கோயிலை நாம் இப்போது பார்க்கும் வகையில் பிரம்மாண்ட வடிவத்துக்கு கொண்டு வந்தார்.
அதன் பிறகு வந்த திருமலை நாயக்கர் உள்ளிட்ட நாயக்க மன்னர்கள் ஆயிரங்கால் மண்டபம், புது மண்டபம் என அதிக பகுதிகளை கட்டி கோயிலை செதுக்கினர். அதனால்தான் இன்று நாம் இந்த அற்புதத்தை கண்ணால் பார்க்க முடிகிறது. இந்த கோயில் வெறும் சுண்ணாம்புக்கல் மட்டும் இல்லை. பல நூறு வருட தமிழர்களின் உழைப்பு, ஈடுபாடு எல்லாமே இந்த கோயிலுக்குள் இருக்கிறது.

அம்மன் மீனாட்சி போர் புரியும் ராணி:
பொதுவாக அனைத்து கோயில்களிலும் அம்மனை சாந்தமான தெய்வமா, அன்பான தெய்வமாகத்தான் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் அவ்வாறு இல்லை. மீனாட்சி அம்மன் பிறப்பால் ஒரு இளவரசி, வீரத்தால் ஒரு சக்கரவர்த்தி. பாண்டிய நாட்டு மன்னன் மலையத்துவச பாண்டியன் மற்றும் காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லை.
அவர்கள் குழந்தை வேண்டி தவம் இருந்தபோது யாக குண்டத்துல இருந்து மூன்று மார்பகத்தோட ஒரு பெண் குழந்தை வெளியே வந்துள்ளது. அந்த குழந்தைக்கு மீனாட்சி என பெயர் வைத்து அனைத்து கலைகளையும் முக்கியமான போர் கலைகளையும் கற்றுக் கொடுத்தனர்.
இளவரசியான மீனாட்சி வளர்ந்ததும் நாட்டை ஆள ஆரம்பித்தார். வீரத்தில் சிறந்து விளங்கிய அவர், பல நாடுகளை போர் செய்து ஜெயித்தார். இது கைலாயம் வரை தொடர்ந்தது. கைலாயம் வரை சென்று சிவபெருமானியே எதிர்த்து போர் செய்ததாக வரலாறு கூறுகிறது.
கைலாயத்தில் சிவபெருமானை பார்த்ததும் மீனாட்சிக்கு இருந்த மூன்றாவது மார்பகம் மறைந்தது. அதன் பிறகு சிவன் சுந்தரேஸ்வரர் அழகான மணவாள தோற்றத்தில் மதுரைக்கு வந்து மீனாட்சியை திருமணம் செய்துள்ளார்.
இதனால் தான் இந்த கோயிலுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்துள்ளது. பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் சிவனுக்கு தான் முதல் பூஜை நடைபெறும். ஆனால் இங்கு மீனாட்சியம்மனுக்கு தான் முதல் மரியாதை. மீனாட்சி அம்மன் போர்வீரர் மாதிரி நிற்கிற கோலம் மிகவும் பிரபலம்.

கல்லில் வடித்த காவியம் கட்டிடக்கலை அற்புதங்கள்:
மீனாட்சியம்மன் கோயிலின் சிற்ப கலை குறித்து பேசுவதற்கு ஒரு நாள் போதாது. அந்த அளவுக்கு கட்டிடக்கலைஞர்கள், சிற்பிகள் என அனைவரும் அவங்க உழைப்பையும் உயிரையும் இந்த கோயிலுக்காகவே கொடுத்துள்ளனர். கோயிலுக்கு எந்த பக்கம் இருந்து வந்தாலும் ஒரு பெரிய கோபுரம் நம் அனைவரையும் வரவேற்கும்.
இந்த கோயிலில் மொத்தம் 14 கோபுரங்கள் இருக்கின்றன. தெற்கு கோபுரம் அனைத்து கோபுரங்களை விடவும் உயரமானது. இது சுமார் 170 அடி உயரம் இருக்கும். ஒவ்வொரு கோபுரத்திலும் ஆயிரக்கணக்கான சிற்பங்கள் உள்ளன. அந்த சிற்பங்கள் அனைத்தும் தமிழர்களின் புராணக் கதைகள், தெய்வங்கள், விலங்குகள் குறித்து பேசுகின்றன.
இந்த கோயிலின் மிகப்பெரிய அதிசயமே ஆயிரம் கால் மண்டபம் தான். இதனுடய பெயர் ஆயிரம் கால்னு இருப்பினும் உண்மையில் இங்க 985 தூண்களே உள்ளன. ஒவ்வொரு தூணும் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு சிற்பமும் அவ்வளவு நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் பொறியியல் அறிவுக்கு இந்த மண்டபம் தான் ஒரு சான்று.
இந்த மண்டபத்தில் இருக்கும் ஒரு சில தூண்களை மெதுவாக தட்டி பார்த்தால் அதில் இருந்து ச..ரி..க..ம..ப..த..நி.. என இசையோட ஏழு ஸ்வரங்களும் கேட்கும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தூணில் உட்புறத்தில் வெவ்வேறு தடிமன் கொண்ட சின்ன சின்ன தூண்களை செதுக்கி இந்த இசையை வரவழைத்துள்ளனர். இந்த மாதிரி நுட்பத்தை வேறு எங்கேயும் பார்க்க முடியாது.
புது மண்டபம்:
இது கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளாது. இங்கு மொத்தம் 124 சிற்பத்துண்கள் உள்ளன. இது திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கலை பொக்கிஷம். இங்கு திருமணம், பட்டு துணி மாடல்கள், சந்தை மாதிரி வியாபாரம் நடக்கும்.
பொற்றாமரைக்குளம்:
கோயிலுக்குள் இருக்கும் பொற்றாமரைக்குளம் மிகவும் புனிதமானது. இந்த குளத்துக்கு அருகில் தான் தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்துள்ளனர். புலவர்கள் எழுதின நூல்கள் தரமாக இருந்தால் குளத்தில் மிதக்குமாம். இல்லையென்றால் மூழ்கி விடுமாம். இப்போது வரைக்கும் இந்த குளத்தில் நீச்சல் அடிக்கிறதுக்கும் மீன் பிடிக்கிறதுக்கும் அனுமதி கிடையாது.
திருவிளையாடற்புராணம்:
சிவபெருமான் மீன்பிடிப்பவராகவும், சித்தனாகவும், மர வியாபாரி என மொத்தம் 64 திருவிளையாடல்கள் மதுரையில் செய்தார் என புராணங்கள் கூறுகிறது. அத்தனை திருவிளையாடல்களும் இந்த கோயில் சார்ந்தே அமைந்துள்ளது.

ஆறுகால பூஜைகள்:
இந்த கோயிலில் காலையில் இருந்து இரவு வரைக்கும் தினம் ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மனுக்கு விடியற்காலை நான்கு மணிக்கு நடை திறக்கபடுவதில் இருந்து இரவு நடை சாத்தும் வரை கோயில் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
சித்திரை திருவிழாவும் தமிழ் பண்பாடும்:
மீனாட்சியம்மன் கோயிலின் மிக முக்கியமான விழா என்றால் அது சித்திரை திருவிழாவே ஆகும். இது வெறும் கோயில் திருவிழா மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு திருவிழா. மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சியம்மனுக்கும் சுந்தரேஸ்வருக்கும் நடக்கிற திருமணம் என இது வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
மீனாட்சி பாண்டிய வம்சத்தை சேர்ந்த ராணியாக இருந்ததினால் இந்த திருக்கல்யாணம் மிகவும் பிரமாண்டமாக ஒரு ராணியின் திருமணம் நடைபெறுவது போல வெகு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா:
மக்கள் பார்க்க தவறாத இன்னொரு முக்கியமான வைபவம் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதே. அழகர் கோயிலில் இருந்து வரும் கள்ளழகர் மீனாட்சி கல்யாணத்தை காண முடியாமல் வைகை ஆற்றில் இறங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த நிகழ்வு எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் மாபெரும் திருவிழா.
பண்பாட்டுப்பிணைப்பு: இந்த சித்திரை திருவிழாவை பார்த்தால் தெரியும். இந்த விழா கோயிலோட மட்டும் முடிவதில்லை. இந்த திருவிழா மக்கள், விவசாயம் என அனைத்து காரியங்களுடனும் பிணைந்துள்ளது.
தண்ணீர் பஞ்சம் வரும்போது விவசாயத்திற்காக ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது என இந்த விழாவுக்கும் விவசாயம், நீர் மேலாண்மை என பல விஷயங்களுக்கும் தொடர்பு உள்ளது. சுருக்கமாக கூறினால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் நம் பழங்காலப் பெருமை, நேர்த்தி, வீரம், கலை என அனைத்தையும் பறைசாற்றும் அடையாளம். மதுரைக்குப் போனால், அம்மனை தரிசிச்சுட்டு, அந்தக் கல்லுல இருக்கிற கதைகளை கேட்டு திரும்புங்கள். மனசுதுக்குப் பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |