250 வருட வரலாற்றை சொல்லும் ஆலய கலயம்- பிரமிக்க வைக்கும் தகவல்கள்
நம்முடைய வரலாற்று சிறப்புகளை கட்டாயம் நான் சில பொருட்கள் வாயிலாகவும் முன்னோர்கள் விட்டுச் சென்ற சில தடயங்கள் வைத்து நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படிக்காக இவ்வாறு வரலாற்று சிறப்புகளை நாம் பெரும்பாலும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் தான் படித்திருப்போம்.
ஆனால் இங்கு ஒரு பழமையான கோவிலில் சுமார் 250 வருடத்திற்கு முன்பாக பாத்திரத்தில் பதிவான வரலாற்று நிகழ்வு ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய கோவில்கள் இருக்கிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பள்ளி கால சாமி கோவிலில் இருக்கும் அபிஷேக கலயம் பாத்திரத்தில் பல்வேறு வரலாற்று குறிப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த பாத்திரத்தில் இருக்கக்கூடிய எழுத்துக்கள் நம்மை வியப்பூட்டும் வகையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கால சாமி கோவில் என்று ஒரு பழமையான கோவில் இருக்கிறது. இங்கு பழமையான கலயம் ஒன்று உள்ளது. இந்த கலயத்தில், " 1763 ஆம் வருடம் நள்ளியில் காலச்சாமி கோவிலுக்கு அடுமையாக்கர் கொடுத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 250 வருடம் முன்னதாகவே இந்த ஊருக்கும் கோவிலுக்கும் அதே பெயர்தான் இருக்கிறது என்பதை இந்த பாத்திரத்தில் வாயிலாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த கலயம் என்பது சுமார் பத்து தலைமுறைக்கு மேலாக பயன்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள்.
இவ்வாறு இருக்கக்கூடிய கலயம் என்பது நமக்கு வரலாற்றில் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







