வீடுகளில் உள்ள தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய 5 முக்கியமான பரிகாரங்கள்
நம்முடைய வீடு என்பது எப்பொழுதும் நேர்மறையான சக்திகள் கொண்டு சூழ்ந்திருக்க வேண்டும். காரணம் வீடுகளில் இருந்து தான் நம் வாழ்க்கை தொடங்குகிறது. ஆதலால் எப்பொழுதும் நாம் வீடுகளில் நேர்மறையான மற்றும் நல்ல சக்திகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் வேண்டும் என்று எண்ணுவதும் உண்டு.
ஆனால் அவை எப்பொழுதும் நடப்பதில்லை. காரணம் நாம் வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது நிறைய நல்ல மற்றும் கெட்ட சக்திகளை உள்வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வருகின்றோம். ஆக நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் நல்ல சக்திகள் சூழ்ந்து அதிர்ஷ்டம் வர முக்கிய பரிகாரங்கள் செய்யலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது நல்ல மாற்றங்களை காண முடியும். அப்படியாக நம் வீடுகளில் செய்ய வேண்டிய அந்த ஐந்து முக்கியமான பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

1. இந்த உலகம் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தினமும் உணர்த்திக் கொண்டிருப்பவர் சூரிய பகவான். இவர் தான் கிரகங்களுடைய தலைவராவார். நம்முடைய வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயமாக சூரிய பகவானுடைய அருள் அவசியம்.
அந்த வகையில் தினமும் காலை சூரிய உதயத்தின் பொழுது சூரிய பகவானுக்கு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சிவப்பு நிறத்தில் பூக்கள் அரிசி குங்குமம் ஆகியவை படைத்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய நம்பிக்கையும் நம்முடைய மனதில் தெளிவும் உண்டாகிறது. இவையெல்லாம் விட நாம் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகி ஒரு பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும்.
2. இந்து மதத்தில் அரச மரம் என்பது ஒரு புனிதமான மற்றும் தெய்வீக தன்மை கொண்ட ஒரு மரமாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. அப்படியாக அரச மரத்திற்கு அடியில் சனிக்கிழமை எள் எண்ணெயில் தீபம் ஏற்றி சனி பகவானை மனதில் நினைத்து வழிபாடு செய்யும்பொழுது நாம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய கஷ்டங்களும் ஜாதகத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கங்களும் குறைந்து நிம்மதியும் வெற்றியும் கிடைக்கும்.

3. புனித நீர்களில் நீராடுவது என்பது நம்மை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். அதாவது புனித நீர்களுக்கு எப்பேர்ப்பட்ட பாவங்களையும் எதிர்மறை சக்திகளையும் கரைக்கக்கூடிய தன்மை இருக்கிறது. ஆக வீடுகளில் கங்கை தீர்த்தம் அல்லது புனித நீர்களில் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு வாரம் ஒரு முறை தெளித்து சுத்தம் செய்து வரும் பொழுது எதிர்மறை சக்திகள் இருந்தால் அவை விலகும்.
4. வீடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ யந்திரம் வைத்து வழிபாடு செய்வது என்பது நமக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கும். இதை வாங்கி நாம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வீடுகளில் அதிர்ஷ்டமும் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற கஷ்டமும் விலகும்.
5. நம்முடைய சாஸ்திரத்தில் அனுமன் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் தடைகளை அகற்றி வெற்றி தரக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்பதை அறிந்திருப்போம்.
ஆக ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் அனுமனுடைய மந்திரங்களை வீடுகளில் ஒலிக்கச் செய்வது என்பது வீடுகளில் பல்வேறு வகையில் நல்ல ஆற்றலை பெற்றுக் கொடுக்கும். அதைவிட நமக்கு ஆபத்தான நிலையில் அவர் நம்முடன் இருந்து பாதுகாப்பாக இருப்பார். தீய சக்திகள் நம் வீட்டிற்குள் வருவதற்கு அஞ்சு அளவிற்கு அனுமனுடைய சக்தியானது நம்மை பாதுகாக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |