இந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆண்டியும் குபேரன் ஆகலாம்

By Sakthi Raj Apr 05, 2026 11:30 AM GMT
Report

நம்முடைய வாழ்க்கையில் பணம் அத்தியாவசிய தேவைகள் என்று நாம் எண்ணினாலும் எல்லோருக்கும் மனதில் ஒரு இடத்தில் கட்டாயமாக மிகப் பெரிய செல்வந்தராக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். மேலும், ஒருவர் செல்வந்தராக உயர்வதற்கு நிச்சயம் அவர்களுடைய கடின உழைப்பும் இறைவனின் ஆசீர்வாதமும் தேவைப்படுகிறது.

அதைவிட முக்கியமாக ஒழுக்கமும் நிலை தடுமாறாத சிந்தனையும் அவசியம். அப்படியாக நம்முடைய எண்ண அலைகள் ஆனது ஒன்றை நோக்கி திசை தடுமாறாமல் பயணிக்கும் பொழுது நிச்சயம் நாம் நினைத்ததை அடைந்து விடலாம்.

அதோடு நாம் இறை அருளையும் பெற்று விட்டால் கட்டாயம் நாம் நினைத்ததை விட பல மடங்கு உயரத்தை வாழ்க்கையில் அடைந்து விடுவோம். அந்த வகையில் ஆண்டியும் குபேரனாக மாற்றக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த பெருமாளின் காயத்திரி மந்திரம் பற்றி பார்ப்போம்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆண்டியும் குபேரன் ஆகலாம் | Perumal Gayatri Mantras To Attract Wealth And Luck

பலரும் அறிந்திடாத திருவண்ணாமலையில் இருக்கும் 5 ரகசிய குகைகள்

பலரும் அறிந்திடாத திருவண்ணாமலையில் இருக்கும் 5 ரகசிய குகைகள்

பெருமாள் காயத்ரி மந்திரம்:

ஓம் நிரஞ்சனாய வித்மஹே!
நிராபாஸாய தீமஹி!
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!!

மேற்கண்ட பெருமாள் மந்திரத்தை பாராணம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய நமஸ்காரம் செய்து பின்பு பூஜை அறையில் அமர்ந்து 108 முறையும் நேரிம் இல்லாதவர்கள் 11 முறையும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் இருக்க கூடிய துன்பங்கள் விலகிப் பெருமாளுடைய பரிபூரண அருளால் உயர்ந்த நிலைக்கு செல்வோம்.

அதோடு, வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாளில் உழைப்பிற்கு நடுவில் அமர்ந்து இந்த மந்திரத்தை இறைவனிடம் நம்முடைய வேண்டுதல் வைத்து பாராயணம் செய்யும் பொழுது மனமானது ஒன்றை நோக்கி மட்டும் பயணம் செல்லும். அதனால் எண்ண அலைகளின் வலிமை அதிகரித்து உழைப்போடு சேர்த்து நாம் செல்வத்தை அடையலாம்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆண்டியும் குபேரன் ஆகலாம் | Perumal Gayatri Mantras To Attract Wealth And Luck

நம்முடைய முற்பிறவி ரகசியங்களை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

நம்முடைய முற்பிறவி ரகசியங்களை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

மேலும் ஒரு முறை குபேரருக்கு செல்வத்தை இழக்கக்கூடிய அபாயம் வந்தது. அப்பொழுது அவர் பெருமாளின் இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்துதான் அவர் இழந்த செல்வத்தை மீட்டு எடுத்தார். உங்களுடைய செல்வத்தை இழக்கும் நேரத்தில் பெருமாளின் இந்து காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து வரும் பொழுது நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இழந்ததை எல்லாம் மீட்டு எடுப்பீர்கள்.

ஆனால் வெறும் மந்திரம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையை உயர்த்தாது. மந்திரம் நம்முடைய மனதை செம்மையாக்கும். ஆனால் வாழ்க்கை வளமாக மாற வேண்டும் என்றால் நிச்சயம் கடின உழைப்பு அவசியம் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US