இனி வீண்பழி சுமத்துவரிடம் இதை சொல்லுங்கள்
காலம் மாறி கொண்டு இருக்கிறது. மனிதர்களின் மனமும் மாறி கொண்டே இருக்கிறது. சுயநலம் நிறைந்த உலகம் சுயநலமற்றது என உணர்த்துவதற்கு பேராபத்து ஏதேனும் நிகழ்ந்தால் உண்டு.
இருப்பினும் சிலர் எப்பொழுதும் தர்மம் கடைபிடித்து இல்லார்க்கு இல்லை என்று சொல்லாமல், மனம் புண் படாமல் ஒரு அழகான மென்மையான மலரை போல் வாழ்ந்து விட்டு போகிறார்கள் .
ஆனால் அப்படி எல்லாரும் அமைந்து வீட்டால் உலகம் மேன்மை ஆகிவிடும், அதுனாலே சிலர் நயவஞ்சகம் பொய் வீண் பழி கூறுதல் என்று பிறர் மனதை காயப்படுத்துகின்றனர் .
உண்மையில் உலகில் மஹாபாரதம் போல் சிறந்த காவியமும் பாடமும் இல்லை, பரந்தாமனை போல் தர்மம் காப்பவனும் எவரும் இல்லை.
அப்படியாக நம்மை விட வலிமை மிகுந்தவன், பணம், பதவி, செல்வாக்கு, படைத்தோர் வீண் பழி சுமத்தினால் அவர்களை பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடுங்கள். இதைத்தான் பத்ம புராணம் கூறுகிறது.
அதாவது
போகட்டும் பரந்தாமனுக்கே
போகட்டும் பரந்தாமனுக்கே
போகட்டும் பரந்தாமனுக்கே
என்று வானத்தை நோக்கி மூன்று முறை கூறுங்கள். உங்களுக்காக அந்த பரந்தாமன் வருவார், வந்த பழிகளெல்லாம் போன வழி தெரியாமல் ஓடிவிடும். ஏனென்றால் பரந்தாமன் மகிமை அத்தகையது.