பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்

Report

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரபலமான கற்பக விநாயகர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்தவகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம் | Pillaiyarpatti Karpaka Vinayakar Chaturthi Flag

இதனைதொடர்ந்து இரவு மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

2ஆம் நாள் வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்திலும், 3ஆம் நாள் பூத வாகனத்திலும், 4ஆம் நாள் கமல வாகனத்திலும், 5ஆம் நாள் ரிஷப வாகனத்திலும் உலா வருகிறார். 

சனியின் பயணம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசிகள்

சனியின் பயணம்.., லட்சாதிபதி ஆகப்போகும் 3 ராசிகள்

6ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மாலையில் தேரோட்டமும் நடக்கிறது.

மேலும் அன்றையதினம் மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம் | Pillaiyarpatti Karpaka Vinayakar Chaturthi Flag  

10ஆம் நாள் விழாவாக 7ஆம் திகதி விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பின்னர் காலையில் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. மேலும் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் திருக்குளத்தில் எழுந்தருளுகிறார்.  

இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US