மனிதன் அடைக்க வேண்டிய முக்கியமான 5 கடன்கள்

By Sakthi Raj Apr 24, 2024 10:14 AM GMT
Report

மனிதர்களாக பிறந்த அனைவருமே கடன் வாங்கி தான் பிறந்திருக்கின்றோம்.அந்த கடனை அடைப்பது என்பது அனைவருடைய பொறுப்பு..

அந்த கடமையாவது தேவகடன்,ரிஷிகடன்,பித்ருகடன்,பூதகடன்,மனுஷ்ய கடன் ஆகும்.

திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தும் மனிதர்கள் கண்டிப்பாக இந்த ஐந்து கடனை சரியாக செய்து முடிக்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

மனிதன் அடைக்க வேண்டிய முக்கியமான 5 கடன்கள் | Pithru Kadan Rishi Kadan Vedha Kadan Parigarangal

அதாவது நாம் பிறந்த வம்சத்திற்கு நாம் நன்றி கடன் பெற்று இருக்கின்றோம்.ஆதலால் அந்த வம்சத்திற்க்கு உண்டான தர்ம நெறிகளை வெளியிட்டவர்கள் ரிஷிகள். ஆகவே அவர்களுக்கு உரிய நன்றியை செலுத்த வேண்டும்.

நாம் இந்த உலகத்தில் பிறப்பது என்பது விதி என்றாலும்,நாம் பிறக்க காரணமான தாய் தந்தையர் மதித்து போற்ற வேண்டும்.மேலும் இந்த உலகத்தில் வழி வழியாக நம்மை வாழ வைக்கும் நம் முன்னோர்களையும் போற்றி வணங்கி நன்றி கடனை செலுத்த வேண்டும்.

மனிதன் அடைக்க வேண்டிய முக்கியமான 5 கடன்கள் | Pithru Kadan Rishi Kadan Vedha Kadan Parigarangal

அடுத்ததாக நாம் உயிர் வாழ்வதற்கு பயிர் செய்வதற்கும் உணவு பொருட்களை பெறுவதற்கும் விலங்குகளும் பறவைகளும் பெரிதும் உதவுகின்றன.அதாவது செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய் வீட்டை பாதுகாக்கிறது.

பசு பால் தருகின்றது,மாடுகள் உழவுக்கு பயன்படுகிறது,இதுபோல எண்ணற்ற உதவிகளை மற்ற பிராணிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நாம் அவற்றுக்கும் கடன்பட்டிருக்கின்றோம்.

ஆக மனிதனாய் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடன்கள் இருக்கிறது.இவற்றை அடைக்காமல் மோட்சம் நமக்கு கிடைப்பதில்லை.

மனிதன் அடைக்க வேண்டிய முக்கியமான 5 கடன்கள் | Pithru Kadan Rishi Kadan Vedha Kadan Parigarangal

வேதங்களில் சொல்லப்பட்ட யாகங்களை செய்வதன் மூலமாக தேவ பூஜை செய்வதாலும் தேவ கடன் அடைகிறது. பிரம்மச்சரியம் இருப்பதாலும் சாஸ்திரங்களை படிப்பதாலும் வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பிறருக்கு சொல்லிக் கொடுப்பதாலும் ரிஷி கடன் அடைகிறது.

பிரமிப்பூட்டும் மரத்தடி பிள்ளையார் வழிபாடு

பிரமிப்பூட்டும் மரத்தடி பிள்ளையார் வழிபாடு


நல்ல பிள்ளைகளை பெறுவதாலும் இறந்து போன முன்னோர்களுக்கு சிரத்தையோடு திதி கொடுப்பதாலும் பித்ரு கடன் முடிகிறது.

நாய்க்கு உணவு வைப்பதாலும், பசுவுக்கு புல் கொடுப்பதாலும் காக்கைக்கு சோறு போடுவதாலும் பூதக்கடன் அடைகிறது.

மனிதன் அடைக்க வேண்டிய முக்கியமான 5 கடன்கள் | Pithru Kadan Rishi Kadan Vedha Kadan Parigarangal

சக மனிதர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை செய்வதாலும் அன்புடன் பழகுவதாலும் மனுஷ்ய கடன் தீர்கிறது.

இவ்வாறு ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

மாணவப் பருவம், இல்லற தர்மம், வனத்தில் சென்று மனைவியோடு வேள்வியாகங்களை செய்வது .

எல்லாப் பற்றுகளையும் துறந்து துறவியாவது ஆகிய இந்த நான்கு நிலைமைகளிலும் பல வகையான கடமைகள் இருக்கின்றன. அவைகளை செய்வதற்கு யாரும் பின்வாங்க கூடாது என்று வேதம் கட்டளை இடுகிறது.

ஆனால் எந்த கடமையை செய்தாலும் பலனில் மட்டும் பற்று வைக்காதே என்று எச்சரிக்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US