வாஸ்து: கார் இருக்கா? அப்போ இந்த திசையில் நிறுத்துங்கள்
வாஸ்து சாஸ்திரங்களின் படி உங்கள் வீட்டில் உள்ள காரை எந்த திசையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
கார் பார்க்கிங்
வீட்டு வடிவமைப்பு மற்றும் அலங்காரத்திற்கு வாஸ்து விதிகளை பின்பற்றுகிறோம். அதேபோல், வாகனம் நிறுத்தும் இடத்திலும் வாஸ்து விதிகளை பின்பற்றினால் பிரச்சனைகள் மற்றும் தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம்.
அதன்படி, தென்மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் வாகனங்களை நிறுத்துவது மிகவும் நல்லது. பார்க்கிங் நுழைவாயில் அல்லது கதவு எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
வாஸ்து டிப்ஸ்
கார் பார்க்கிங் பகுதியின் மேற்கூரை வடக்கு நோக்கி சாய்ந்தால், அது வாஸ்து படி சரியானதாக கருதப்படுகிறது. அதேபோல் வடமேற்கில் கார் சாவிகள் மற்றும் கையேடுகளை வைத்திருப்பது நல்லது. காரை தெற்கு மற்றும் தென்கிழக்கு மூலை நோக்கி நிறுத்த வேண்டாம்.
கிழக்கு அல்லது வடக்கே இருக்க வேண்டும். சனி அனுகூலமான ராசிக்காரர்கள் மட்டுமே தங்கள் வீடு மற்றும் அலுவலகத்தின் கீழ் அடித்தளத்தில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யலாம்.
மேலும், வாகன விபத்துகளைத் தடுக்க, வாகன விபத்துகளைத் தடுக்கும் சாதனம் அல்லது வாகனத்தில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்தை வைக்கலாம்.
கார் ஷெட்டிற்கு வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வெளிர் வண்ணங்களை கார் ஷெட்டில் பூசுவதும் நல்லது அது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.