2026: நிதி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு காத்திருக்கிறதாம்

By Sakthi Raj Feb 23, 2026 09:54 AM GMT
Report

ஜோதிடத்தில் இரண்டாம் இடம் பணம் மற்றும் வீடு குறிக்கக் கூடியது ஆகும். அதாவது கடினமாக உழைப்பு மற்றும் தொழில் ரீதியாக நாம் சம்பாதிக்கக்கூடிய நிலையை அவை குறிக்கிறது.

அந்த வகையில் தற்போதைய கிரக அமைப்புகளின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் வருமானமும் சம்பள உயர்வும் கிடைக்க இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: நிதி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு காத்திருக்கிறதாம் | Planet Changes Brings Income Increase For 4 Zodiac

ஜோதிடம்: 12 ராசிகளின் பிறவி குணம் என்ன தெரியுமா?

ஜோதிடம்: 12 ராசிகளின் பிறவி குணம் என்ன தெரியுமா?

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நிதி யோகத்தால் அவர்கள் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான நிலை உருவாகப் போகிறது. புதிய நிலம், வீடு வாகனம் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணையிடம் இருந்து பரிசுகள் பெறக்கூடிய காலகட்டமாகவும் அமைகிறது. உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் விலகப் போகிறது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது இவர்களுக்கு எதிர்பாராத சம்பள உயர்வு மற்றும் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் இவர்கள் வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்குவார்கள். அதை போல் வங்கிதொடர்பான குழப்பங்கள் யாவும் விலகும். சேமிப்பு திட்டத்தை தொடங்குவீர்கள்.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன்

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு மிகப்பெரிய செல்வ வளத்தை கொண்டு சேர்க்கப் போகிறது. ஒரு அதிர்ஷ்டமான திருப்புமுனை அவர்கள் வாழ்க்கையில் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அலுவலகத்தில் நீங்கள் கேட்ட சம்பளத்தை பெறக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வேலையில் திடீர் ஏற்றத்தை பெறுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது இவர்களுடைய பேச்சு திறமையால் வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி செய்வார்கள். ஒரு சிலருக்கு ஆடம்பர பொருட்கள் மீது அதிக ஆர்வம் உண்டாகும். நண்பர்கள் வட்டார விரிவடையும். சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய நட்புகளை பெறுவீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US