உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன்

By Sakthi Raj Feb 23, 2026 07:51 AM GMT
Report

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் அமைந்திருக்கிறது புலீஸ்வரி அம்மன் கோவில். இந்த கோயில் 108 சக்தி பீடங்களில் ஐம்பதாவது தலமாக விளங்குகிறது. மேலும், உலகத்திலே புலீஸ்வரி அம்மன் என்ற பெயரில் அமைந்துள்ள ஒரே தலம் இதுதான் என்று பல ஆய்வுகளின் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடு இந்த கோவில் சங்க கால இலக்கியங்கள் ஆன அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும் இருக்கிறது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆவணங்களின்படி இந்த கோவில் 150 ஆண்டு கால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றையும் கொண்டிருக்கிறது.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் | Kollidam Puleeswari Amman Temple Made World Record

சந்திர கிரகணத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

சந்திர கிரகணத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

இதனை தொடர்ந்து கொள்ளிடம் ஆன்மீக பற்றாளர் பிரபு என்பவரின் முயற்சியால் இந்த கோவில்களின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.

இவற்றை சரிபார்த்த "ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் " நிறுவனம் இந்த கோவில் தனித்துவமான உலகளாவிய பெயரிடல் மற்றும் பண்டைய இலக்கிய மரபு என்ற பிரிவின் கீழ் இந்த கோவிலுக்கான உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கி சிறப்பித்து இருக்கிறது. இந்த தகவல் எல்லோரையும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US