பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா
பொள்ளாச்சி அடுத்துள்ள சூலக்கல் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமையான சூலக்கல் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இந்தாண்டு கடந்த 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
நாள்தோறும் கிராம மக்கள் பூச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்து வந்தனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று தொடங்கியது.
மூன்று நாட்கள் நடக்கும் தேர் திருவிழாவில் முதல் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவப்பு பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கடந்த 17 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாளை மற்றும் நாளை மறு நாள் தொடர்ந்து மூன்று நாட்கள் தேர்த் திருவீதி உலா வந்து கோயிலை வந்தடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |