பூஜைக்கான 10 நம்பிக்கைகளும் நன்மைகளும்
நாம் பூஜை செய்யும்பொழுது பூஜைக்கு வைக்க வேண்டிய பொருட்களை எப்படி வைக்க வேண்டும். எப்படிவைப்பதால் நன்மைகள்ஏற்படும் என்பதைப் பற்றி பார்ப்போம்
ஒரு உருவத்தில் சக்தியை வரவழைத்த பின் அந்த உருவத்தை சிதைத்தால் பெறப்பட்ட சக்தி இழப்புக்கு உள்ளாகிறது. ஆண்டுதோறும் நிகழும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் வழிபடப்படும் கணபதியின் உருவத்தை இறுதியாக தண்ணீரில் விடும்வரை உடைக்கக் கூடாது.
கோயில் மணி, சங்கு, அடுப்பு ஆகியவை தவறி உடைந்தாலும் அவற்றின் சக்தி இழப்புக்கு உள்ளாகிறது.
இந்துக்களின் சடங்குகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் அட்சதை உடையாத முழு அரிசியாக இருக்க வேண்டும்.
சடங்குகளில் பயன்படுத்தப்படும் நூலும் முறுக்கப்படாமல் இயல்பான நிலையிலேயே பயன்படுத்தப்படுகிறது.
கலசங்களிலும், கங்கணங்களிலும் திருமணத்தில் நிகழும் ‘மங்கல ஸ்நானம்’ சடங்கிலும் முறுக்கப்படாத நூல்களையே பயன்படுத்துகிறார்கள்.
பூச்சிகளால் சிதைக்கப்பட்ட வில்வ இலைகளை வழிபாட்டில் அர்ச்சனைக்கு பயன்படுத்தக் கூடாது. 6. பெரியோர்கள் உணவு உண்ண பயன்படுத்தும் இலைகள் கிழியாமல் இருக்க வேண்டும்.
வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் துளசி இலைகள் இரட்டையாய் சேர்ந்து இருக்க வேண்டும். 8. வாழைப் பழங்கள் ஐந்து பழங்களைக்கொண்ட சீப்பாகவே இருக்க வேண்டும்.
எல்லா புனித சடங்குகளிலும், விரதங்களிலும், சாந்தி சடங்குகளிலும், சிராத்த சடங்குகளிலும் தைத்த. கிழிந்த அல்லது முடிச்சுகள் உள்ள ஆடைகளை அணிந்துகொள்ள கூடாது என்ற தடை உள்ளது.
ஆசாட ஏகாதசி அன்று பழைய அல்லது கிழிந்த ஆடைகளை ஊர் எல்லையில் அல்லது ஒரு மரத்தினடியில் போட்டு விட வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |