12 ராசிகளின் நிறை குறைகள் என்ன தெரியுமா?
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு ராசிக்கும் நிறை, குறை என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளுக்கு உடைய நிறை, குறைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் நேர்மையான குணம் கொண்டவர்களாக இருந்தாலும் இவர்களுடைய பிடிவாதம் இவர்களுடைய குறையாக மாறிவிடுகிறது.
ரிஷபம்:
இவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். ஆனால் பல நேரங்களில் தயக்கத்துடன் காணப்படுவார்கள்.
மிதுனம்:
இவர்களுக்கு சிறந்த பண்பு இருந்தாலும் இவர்களுடைய தனிமையால் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார்கள்.
கடகம்:
இவர்களுடைய எளிமை தான் இவர்களுடைய நிறை, ஆனால் தலைக்கணம் தான் இவர்களுடைய குறையாக இருக்கிறது.
சிம்மம்:
இவர்களுடைய தன்னம்பிக்கை தான் இவர்களுடைய நிறை இவர்களுடைய அதிக முன்கோபம் குறையாக மாறுகிறது.
கன்னி:
இவர்கள் எப்பொழுதும் ஒழுக்கமாக இருப்பார்கள். அது அவர்களுடைய நிறையாக இருந்தாலும், இவர்களுடைய தனிமை இவர்களுடைய குறையாக இருக்கிறது.
துலாம்:
இவர்கள் உடைய பொறுப்புணர்வு இவர்களுடைய நிறை ஆனால் இவர்களுடைய அவசர புத்தி இவர்களுடைய குறையாக மாறுகிறது.
விருச்சிகம்:
இவர்களுடைய நுண்ணறிவு இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால் அதிகப்படியான கோபம் இவர்களுடைய குறையாக மாறுகிறது.
தனுசு:
இவர்களுடைய நல்ல மனம் இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இல்லாமல் போவதால் அது இவர்களுடைய குறையாக மாறுகிறது.
மகரம்:
இவர்களுடைய கடின உழைப்பு இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால் இவர்களுடைய அமைதி இவர்களுடைய குறையாக மாறுகிறது.
கும்பம்:
இவர்களுடைய புத்திசாலித்தனம் இவர்களுக்கு நிறையாக இருக்கிறது. ஆனால் மனக்குழப்பம் இவர்களுடைய குறையாக மாறுகிறது.
மீனம்:
இவர்களுடைய கருணை இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால் எதற்கும் இவர்கள் உடனடியாக உணர்ச்சிவசப்படக் கூடியது இவர்களுடைய குறையாக மாறுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |