இன்று(10-07-2025) இரட்டை அருள் பெறும் அரிய நாள்- தவறவிடாதீர்கள்
இந்து மதத்தில் பௌர்ணமி தினம் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, இன்று (10-07-2025) பௌர்ணமி தினத்தில் நாம் நம்முடைய ஆன்மா வளர்ச்சிக்காகவும், ஆன்மீக வளர்ச்சிக்காகவும் வழிபாடு செய்தால் மிக சிறந்த பலனைப் பெறலாம்.
மேலும், நாம் பௌர்ணமி தினத்தில் செய்யக்கூடிய பூஜைகள், ஜபங்கள், விரதங்கள், தியானங்கள் இவை அனைத்தும் இரட்டை பலன் கொடுக்கக்கூடியவை. அந்த வகையில் இந்நாளில் மஹா வராகி அம்மனையும் மற்றும் ஸத்யநாராயணரையும் ஒரே நாளில் வணங்குவது நமக்கு பல்வேறு சிறப்புகளை கொடுக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக வாராஹி அம்மன் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறாள். இவள் தீய சக்திகளை அழிக்கக் கூடிய சக்தி பெற்றவள். மேலும், இந்த அம்மன் ஒருவருக்கு ஏற்பட்ட பில்லி, சூனியம், சாபம், பழி, கர்ம பிணி போன்றவை விலக்கி அருள் புரிபவள்.
அந்த வகையில் சந்திரனின் சக்தி உச்சமடைந்து, மனதின் ஆழத்தில் ஒளிரும் நாள் இந்த பௌர்ணமி. அன்றைய தினத்தில் அம்மனுக்கு நள்ளிரவு, ராகு காலம், சந்திர உச்ச நேரங்களில் பூஜை செய்து வழிபாடு செய்தால் மிக உயர்ந்த பலன் கிடைக்கும்.
அப்படியாக, இன்று அம்மனின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரமாக ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 வரையிலும், பௌர்ணமி சந்திர உதயம் பிற்பகல் 5.50 - இரவு வரையிலும், நள்ளிரவு பூஜை செய்ய இரவு 11.30 – 12.30 ஆகும்.
பூஜை செய்யும் முறைகள்:
இன்று அம்மனுக்கு சிவப்பு துணியில் அலங்காரம் செய்யுங்கள். பிறகு எலுமிச்சை பழ மாலை, சுண்டல், கார சாதம், கூழ் போன்றவற்றை நெய்வேத்தியமாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாராஹி அம்மனுக்கு உரிய "ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் வராகி நமஹா" என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
பிறகு கண்களை மூடிக்கொண்டு அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு உங்கள் வேண்டுதலை வையுங்கள். உங்கள் பயம் பதட்டம் எல்லாவற்றையும் அம்மனிடம் சமர்ப்பித்து தங்களை அதில் இருந்து விடுபட அருள் புரிய வேண்டிக்கொள்ளுங்கள்.
அதோடு, ஸத்யநாராயண பூஜை செய்து வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம். இந்த பூஜை செய்தால் குடும்பத்தில் சந்தோசம், நிம்மதி, ஒற்றுமை, வேலை வாய்ப்புகள் இவை அனைத்தும் நல்ல முறையில் அமையும். இந்த பூஜை செய்யமுக்கிய காரணம் என்னவென்றால் விஷ்ணுவின் சக்தியும் சந்திரனின் சக்தியும் இணையும் நாள்.
இந்த நாளில் நாம் மன குழப்பங்கள் விலகவும், தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் விலகவும், நாம் இந்த பூஜை செய்து வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பூஜை செய்யும் முறைகள்:
விஷ்ணு படத்தை எடுத்துக்கொண்டு, அலங்காரம் செய்து, பஞ்சாமிர்தம், பழம், கேசரி, பாயசம் நைவேத்யமாக சமர்ப்பிக்கவும்.
பிறகு ஸத்யநாராயண கதைகள் ஐந்து அதிகாரங்களாக வாசிக்க வேண்டும். குடும்பத்துடன் சேர்ந்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு இன்றைய நாளில் வாராஹி அம்மன் பூஜையும், ஸத்யநாராயண பூஜையும் செய்து வழிபாடு செய்து வந்தால் அம்மன் அருளால் இருள் விலகி, விஷ்ணு பகவானின் அருளால் நல்வாழ்வு கிடைக்கும்.
அதிலும் மிக முக்கியமாக ஸத்யநாராயண பூஜையில் உள்ளவர் வெளியிலிருந்து அன்பை பெறுகிறார். வாராஹி அம்மன் பூஜை செய்பவர்கள் உள் துணிச்சலையும் நம்பிக்கையையும் பெறுகிறார்.
இவை இரண்டும் சேரும் போது உடலிலும், மனதிலும், ஆன்மாவிலும் புதிதாக பிறப்பு ஏற்படும். ஆதலால் தவறாமல் இந்த இரண்டு பூஜைகள் செய்து இறை அருள் பெற்று மன தூய்மை அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |