வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் கிருஷ்ண மந்திரம் - தினமும் உச்சரித்தால் நல்லது
பொதுவாகவே ஒருவருடைய வீடானது செல்வ செழிப்புடன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நினைப்பார்கள்.
அதற்காக பல தெய்வத்தினை வழிப்பட்டு பல பரிகாரங்கள் செய்வதும் உண்டு. ஆனால் விளையாட்டு தனமாக இருக்கும் கிருஷ்ணரை பலரும் மறந்து விடுவார்கள்.
ஆனால் குழந்தை தனத்துடன் இருக்கும் கிருஷ்ணரை மெய்யன்போடு வழிப்பட்டால் வாழ்வில் பல நன்மைகளை பார்க்கலாம்.
அதாவது மகாவிஷ்ணுவின் 9வது அவதாரமான ஹீ கிருஷ்ணரின் வழிப்பாடானது பலருக்கும் பல வழிகளில் நன்மையை அள்ளித்தருகிறது.
திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் உலகை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டதாகும் ஆனால் கிருஷ்ண அவதாரம் மட்டுமே தர்மம், நீதி மற்றும் பக்தியை போகிப்பதற்காக எடுக்கப்பட்டதாகும்.
வீட்டில் செல்வம் அதிகரித்து சந்தோஷமாக வாழ்வதற்கு கட்டாயம் கிருஷ்ணரின் முக்கியமான இந்த 5 மந்திரங்கை ஓத வேண்டும்.
5 கிருஷ்ண மந்திரங்கள்
1. கிருஷ்ண காயத்ரி மந்திரம்
ஓம் தேவகீநந்தனாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத்
2. ஹரே கிருஷ்ண மகாமந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
3. கிருஷ்ணர் மூல மந்திரம்
ஓம் கிருஷ்ணாய நமஹ
4. ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய சரணம் மமஹ
5. கிருஷ்ண மந்திரம்
கிருஷ்ணாய வாசுதேவாய ஹராரே
பரமாத்மனே ப்ரணதாஹா
க்ளேஷணஸயே கோவிந்தாய நமோ நமஹ
எப்போது கூறலாம்?
திங்கட்கிழமைகளில் உச்சரிக்க ஆரம்பித்தால் நல்லது. இதை கூறும் போது நீங்கள் கட்டாயம் மஞ்சள் நிற ஆடை அணிந்து வடக்கு திசை நோக்கி அமர்ந்திருக்க வேண்டும்.
வீட்டில் கிருஷ்ணர் படத்திற்கு நெய் விளக்கேற்றி, மனதை ஒருநிலைப்படுத்தி மற்றும் கிருஷ்ண பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் படைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இதை தினமும் 108 அல்லது 1008 முறை கூறலாம். இதை கூறுவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் குறைந்து வாழ்வில் பிரகாசம் உண்டாகும். மற்றும் வீட்டில் உள்ளவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.