நடக்காத விஷயங்களையும் நடத்திக்காட்டும் சக்தி வாய்ந்த நரசிம்ம மந்திரம்...

By Sakthi Raj Oct 28, 2026 07:57 AM GMT
Report

வாழ்க்கையில் ஒரு சிலருக்கு எல்லாம் தடையாக இருக்கும். அதிலிருந்து அவர்களால் நகரவே முடியாது போல் எண்ணுவார்கள். வேலை, தொழில், குடும்பம், திருமணம் என்று எல்லாம் தடைப்பட்டு ஒரே இடத்தில் இருப்பது போல் இருக்கும்.

அப்படியாக, அவர்கள் அந்த காலகட்டங்களில் நம்மால் அந்த கஷ்டங்கள் இருந்து மீண்டு வர முடியுமா? நம் வாழ்க்கை மாறுமா? என்கின்ற ஒரு குழப்பமும் பயமும் இருக்கும். அந்த காலகட்டங்களில் இறை வழிபாடு மட்டுமே நிலையை மாற்றி அமைக்க முடியும்.

அந்த வகையில், யாராக இருப்பினும் நடக்கவே நடக்காது என்று அவர்கள் சோர்ந்து போகும் பொழுது அவர்கள் மனம் தளராமல் இந்த நரசிம்ம மந்திரத்தை பாராயணம் செய்ய நிச்சயம் நல்ல மாற்றம் உண்டு. 

நடக்காத விஷயங்களையும் நடத்திக்காட்டும் சக்தி வாய்ந்த நரசிம்ம மந்திரம்... | Powerful Narasimha Mantra To Change Life

2026: தீபாவளிக்கு பிறகு வரும் செவ்வாய் பெயர்ச்சி.. யாருக்கு டாப் யோகம் காத்திருக்கிறது

2026: தீபாவளிக்கு பிறகு வரும் செவ்வாய் பெயர்ச்சி.. யாருக்கு டாப் யோகம் காத்திருக்கிறது

மந்திரம்:

யஸ்ப அபவத் பக்தஜன,
ஆர்த்திஹந்து பித்ருத்வம்,
அந்யேஷு அவிசார்ய,
தூர்ணம்ஸ்தம்பே,
அவதார தம் அநந்ய லப்யம்,
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

நடக்காத விஷயங்களையும் நடத்திக்காட்டும் சக்தி வாய்ந்த நரசிம்ம மந்திரம்... | Powerful Narasimha Mantra To Change Life

பொருள்:

மந்திரத்தின் பொருள் பக்தி இல்லாதவர்களால் உன்னை எண்ணவோ நெருங்கவோ முடியாதவனே! தாயின் கருவறையில் சென்று அவதரித்தால் அதற்கு கால தாமதம் ஆகிவிடும் என்று உடனடியாக பக்தனை காப்பாற்ற தூண்டில் அவதரித்தவனே!

நினைத்த நொடியில் பக்தர்களுடைய துன்பங்களை போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்! உன்னை பணிகின்றேன்! என்று இந்த மந்திரத்தை மனதார நரசிம்மர் நினைத்து செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வர நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டு. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US