மேஷ ராசிக்காரர்களுக்கு ஏன் காதல் தோல்வி? காரணம் என்ன..
ஜோதிடத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு காதல் தோல்வி மற்றும் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படுவதை நான் பார்க்கலாம். இது குறித்து பிரபல ஜோதிட ஈஸ்வரி அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, மேஷ ராசியினர் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருப்பார்கள்.
அதேபோல், தங்களுக்கு பிடித்தவர்களுடன் இவர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களுடைய வேலை மற்றும் இலக்குகள் காரணமாக அதிக அளவில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.
அந்த காரணத்தினால் காதலில் சில சிக்கல்களை சந்திக்கிறார்கள். மேஷ ராசியினர் உடைய காதல் வாழ்க்கையில் தோல்வி ஏற்படுவதற்கான முக்கிய காரணம், இவர்கள் ஈகோ மற்றும் விட்டுக் கொடுத்துப் போகாத மனப்பான்மை.
இவர்கள் பல நேரங்களில் முடிந்து போன பழைய சம்பவங்களை அடிக்கடி பேசி சண்டை போடுவதால் அந்த பிரச்சனை இன்னும் வலுவாகிறது. இவர்கள் திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் ஈகோவை விட்டுவிட்டு பணிந்து செல்வதால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மேலும், மேஷ ராசியினர் மன அழுத்தம் மற்றும் சண்டைகளை தவிர்ப்பதற்கு மலை சார்ந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
இவர்கள் பழனி முருகன் கோவில் அல்லது திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்து வருவது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் மன அமைதியையும் கொடுக்கும்.
மேலும், மேஷ ராசியினுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூடுதல் தகவல்களை இந்த காணொளிகள் பாதை தெரிவித்துக் கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |