தெய்வீக சக்தியை பெற உதவும் சக்தி வாய்ந்த மந்திரம்
ஒரு மனிதன் எதையும் சாதிக்க அவனுக்கு நிச்சயம் மனதில் பயம் என்பது இருக்க கூடாது.காரணம் அந்த பயம் அவனை பல விதமான சிந்தனைக்குள் உட்படுத்தும்.பயமானது ஒரு செயலை அவனை முழுமையாக செய்யவிடாமல் தடுத்து விடும்.
இன்னும் சொல்லப்போனால் பயம் தான் ஒரு மனிதனின் முதல் எதிரி.அப்படியாக அவனுக்கு ஆழ்மனதில் இருக்கும் பயம் விலகி எதையும் தைரியமாக செய்ய அவனுக்கு இறையருள் நிச்சயம் தேவை.
இறைவன் இருக்கின்றான் அவன் நடப்பதை பார்த்து கொள்வான் என்ற அதீத நம்பிக்கை இருந்தாலே நாம் எதையும் எளிதாக கடந்து விட முடியும்.அப்படியாக இறைவனின் பரிபூர்ண அருளை பெற நாம் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் பற்றி பார்ப்போம்.
சக்தி மந்திரம்:
ஓம் தேஜோஅஸி தேஜோமயி தேஹி | வீர்யமஸி
வீர்யம் மயி தேஹி | பலமஸி பலம் மயி தேஹி |
ஓஜோஅஸி ஓஜோமயி தேஹி | மந்யுரஸி மன்யும் மயி
தேஹி | ஸஹோஸி ஸஹோமயி தேஹி || ஓம்
பொருள்:
ஆன்மாவின் சக்தியாக விளங்கும் இறைவனே என்னுடைய ஆன்மாவிற்கு சக்தி வழங்கிட வேண்டுகிறேன்.பொறுமையின் சக்தியாய் திகழும் இறைவனே எதையும் தாங்கும் பொறுமையை உன்னிடம் வேண்டுகிறேன்.
உடல் சக்தியாய் விளங்கும் இறைவனே நல்ல ஆரோக்கியம் வேண்டி வேண்டுகிறேன்.தைரியத்தின் சொரூபமாக இருக்கும் இறைவா எனக்கு தைரியத்தை தர வேண்டுகிறேன். இந்த வாழ்க்கையை கையாலும் முழு பக்குவத்தையும் எனக்கு நீ தந்தருள வேண்டும் இறைவனே!என்பதே ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |