சனி சந்திரன் சேர்க்கை-விஷ யோகத்தால் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
Report this article
சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் இந்த ராசியினர் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.பொதுவாகவே வேத ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுடைய ராசியை மாற்றுவது வழக்கம்.
அப்படி ராசியை மாற்றும் கிரகங்களின் தாக்கம் காரணமாக ராசிகள் இரண்டு விதமான பலன்களை பெறுகிறார்கள்.அதாவது சனி அஸ்தமனமான கும்பத்திற்கு இப்போது சந்திரன் செல்கிறார்.இதன் காரணமாக கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகிறது.
இந்த விஷ யோகம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஒரு சில ராசிகளுக்கு ஒருவிதமான தாக்கத்தை உண்டாக்கும்.அவ்வாறு விஷ யோகத்தால் பாதிக்கப்படக் கூடிய ராசியினர் யார் யார் என்று தெரிந்து கொள்வோம்.
கடகம்:
கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கடக ராசியினர் அவர்கள் உடல் நிலையில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.வியாபாரத்தில் அவர்கள் கட்டாயம் சில முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.இந்த காலகட்டத்தில் பிறரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.
கன்னி:
கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் கன்னி ராசியினர் கோர்ட் வழக்குகளில் சிக்கும் வாய்ப்புகள் உருவாகும்.வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும்.பிறரிடம் பணம் கொடுத்து வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.பிள்ளைங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
மீனம்:
கும்பத்தில் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் மீன ராசியினருக்கு செலவுகள் அதிகரிக்கும்.புதிய வேலை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.அலுவலகத்தில் பிறரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |