செவ்வாய் பெயர்ச்சி: மார்ச் மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை தான்
பொதுவாகவே ஜோதிட கணிப்புகளில் கிரகங்களின் நிலையானது முக்கிய பங்கு வகிக்கின்றது. காரணம் கிரக பெயர்ச்சியானது ஒருவருடைய பிறப்பு ராசியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றரை மாதம் வரையில் பயணிப்பார், மேலும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி கும்ப ராசியில் இருந்தபடி சதயம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
அதன் விளைவாக 12 ராசியினரும் சாதக பாதக தாக்கத்தை அனுபவித்தாலும், நிதி ரீதியில் உச்ச கட்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம் - செவ்வாய் சதயம் நட்சத்திரத்திற்கு செல்வதால் சிம்ம ராசியினரின் தொழில் வாழ்க்கை அமோகமாக அமையப்போகின்றது. வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.
பொருளாதாரம் சீராக இருப்பதால், புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் கூடிவரும். மேலும் முன்னைய முதலீடுகளின் மூலம் அதிக லாபம் கிடைப்பதற்கு வாய்புள்ளது.
தனுசு - செவ்வாய்யின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசியினரின் வாழ்க்கையில் பல்வேறு நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். புதிய வருமாத்துக்கான வழிகள் பிறக்கும். பணவரவு தேவைக்கு அதிகமாகவே இருக்கும்.
நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். இந்த காலகட்டத்தில் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் யோகம் காணப்படுகின்றது.
கும்பம் - செவ்வாயின் சதயம் நட்சத்திர பெயர்சியால் கும்ப ராசியினர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார ஏற்றத்தை அனுபவிக்கப்போகின்றார்கள்.
நீண்ட நாள் ஆரோக்கியத்தில் இருக்கும் குறைபாடுகள் சீராகி உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் அமோக வளர்ச்சியை கொடுக்கும்.