சாணக்கியர் அவருடைய நெறிமுறைகளுக்கு மிகவும் பிரபலமான பெயர் பெற்றவர்.இவர் மக்களுக்கு பயனுள்ள பொருளியல் போன்ற பல நூல்கள் எழுதி உள்ளார்.வரலாற்று ஆதாரங்கள் அடைப்படையில் சாணக்கியர் கிமு 376ல் பிறந்தார்.சாணக்கியர் ஒரு அரசியல் வாதி,ராஜதந்திரி மற்றும் ஒரு சிறந்த அறிஞர் ஆவார்.
சாணக்கியர் எழுதிய நூல் படி எவர் ஒருவர் அவர் வாழ்க்கையில் ஒழுக்க நெறியை பின்பற்றுகிறாரோ அவர் நிச்சயம் வாழ்க்கையின் உயர்ந் நிலை அடைவார் என்பது ஆகும்.மேலும்,ஒரு சில நெறி தவறிய மனிதர்களுடன் இருப்பது அவர்கள் மரணத்துடன் வாழ்வதற்கு சமம் என்று சொல்கிறார்.அப்படியாக சாணக்கிய சொல் படி எந்த நபரை நாம் மறந்தும் நம்பக்கூடாது என்று பார்ப்போம்.
தீய பெண்கள்:
எந்த பெண் மிகவும் கடுமையான பேச்சுக்கள் கொண்டும்,அறம் தவறிய நடத்தையோடும் இருக்கிறாளோ அவரின் துணையின் நிலைமை இறந்ததற்கு சமம் என்கிறார்கள்.காரணம்,அந்த பெண்ணிற்கு எதிலும் கட்டுப்பாடு இல்லை,அவளால் பிரச்சனைகளும் வம்புகளும் மட்டுமே மிஞ்சும்.
தந்திரம் நிறைந்த நண்பன்:
நாம் ஒருபொழுதும் தந்திரம் கொண்ட மனிதர்களுடன் பழகுவது கூடாது.அவர்கள் எந்த நேரத்திலும் உங்களுக்கு எளிதாக துரோகம் இளைப்பார்கள்.அவர்களின் நோக்கமே உங்களை வீழ்த்துவதாக மட்டுமே இருக்கும்.
அவர்களை உங்கள் அருகில் வைத்து கொள்வதால் உங்களுக்கு எதிராக மட்டுமே செயல்படுவார்கள்.அதாவது பாம்பு இருக்கும் இடத்தில் நம்மால் எப்படி வாசிக்க முடியாதோ அதை போல் தான் இந்த தந்திரம் கொண்ட நண்பனுடன் நம்மால் வாழ முடியாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |