வாழ்க்கையில் வெற்றியும் மன வலியையும் கொடுக்கும் சக்தி வாய்ந்த அனுமன் மந்திரம்
ஸ்ரீ ராமபிராமின் தீவிர பக்தரான அனுமன் பக்தியிலும், மன வலிமையிலும், உடல் வலிமையிலும் சிறந்து விளங்க கூடியவர். இவரை நாம் வழிபாடு செய்யும் பொழுது நமக்கு வாழ்க்கையில் ஏற்படுகின்ற தடைகள் விலகுகிறது. அதைவிட முக்கியமாக நம்மால் கடந்து செல்ல முடியாத என்ற காரியங்களை நாம் எளிதாக கடந்து செல்வதற்கான தைரியம் கிடைக்கிறது.
பொதுவாக, அனுமன் வழிபாடுகளின் பொழுது நாம் நம்முடைய மன ரீதியாக மாறுதல் வருவதை நாம் பார்க்கலாம். அதிலும் அனுமனுடைய மந்திரங்களை நாம் பாராயணம் செய்யும் பொழுது வாழ்க்கையில் எதையும் நாம் பக்தியோடும் துணிவோடும் உண்மையோடும் செய்தால் சாதித்து விடலாம் என்கின்ற வலிமையை கொடுக்கிறது.
அந்த வகையில், நீங்கள் வாழ்க்கையில் குழப்பத்தால் சூழ்ந்து இருக்கின்ற பொழுது நமக்கு வெற்றி கிடைக்குமா என்று குழம்பிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அனுமனுடைய இந்த மந்திரத்தை நீங்கள் பாராயணம் செய்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றிகள் குவியம்.

மந்திரம்:
சர்வ கல்யாண தாதாரம், சர்வ வாபத் நக மாருகம்;
அபார கருணா மூர்த்திம், ஆஞ்சநேயம் நாமம் யஹம்.
அஞ்சனா கர்ப சம்பூதம், குமாரம் பிரம்மச்சாரிணம்;
துஷ்ட க்ரஹ விநாசாய, ஹனுமந்த முபாஸ்மஹே !
ஸ்ரீராம தூத மஹாதீர, ருத்ரவீர்ய சமுத்பவ;
அஞ்சனா கர்ப சம்பூத, வாயுபுத்ரா நமோஸ்துதே.
அஸாத்ய ஸாதக ஸ்வாமின், அஸாத்யம் தவ கிம் வத;
ராமதூத க்ருபா ஸீந்தோ, மத்கார்யம் சாத்ய பிரபோ
இந்த மந்திரத்தை தினமும் நீங்கள் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி அமைதியாக உங்களால் எத்தனை முறை பாராயணம் செய்ய முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லைகள் விலகும். எதையும் துணிந்து போராடக்கூடிய வாய்ப்பை பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |