சனிக்கிழமை இந்த 4 விஷயங்கள் செய்தால் சனி பகவானின் முழு அருளை பெறலாம்
நம்முடைய இந்து மதத்தில் ஒவ்வொரு கிழமைகளும் ஒவ்வொரு தெய்வத்திற்குரியதாக இருக்கிறது. அந்தந்த கிழமைகளில் நாம் அந்தந்த தெய்வங்களை வழிபாடு செய்யும்பொழுது நாம் அவர்களுடைய பரிபூரண அருளை பெறலாம். அப்படியாக சனிக்கிழமை சனிபகவானுக்கு உரிய நாளாக இருக்கிறது.
சனிபகவான் என்றாலே ஜோதிடத்தில் கர்ம காரகன் என்று சொல்வார்கள். அதாவது ஒருவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அவர்களுக்கு தக்க பாடத்தை வழங்குவதில் சனிபகவான் மிகவும் வல்லமை பெற்றவர் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஆதலால் சனி பகவான் என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் வருவதை பார்க்க முடிகிறது. ஒருவர் சனி திசையில் நிறைய பாடங்களை கற்றுக்கொள்வார்கள். நன்மையை செய்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எந்த விஷயங்களில் வாழ்க்கையில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்ற ஒரு முழு பாடத்தையும் தீமையை செய்தவர்களாக இருந்தாலும் தீமையை செய்வதனால் அவர்களுக்கு வரக்கூடிய பாதிப்பையும் அவர் மிகப்பெரிய ஒரு பாடமாக கற்பித்து கொடுப்பவர்.

இருப்பினும் சமயங்களில் இவருடைய பாடமானது சற்று கடினமாக இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் சனி பகவானால் உருவாக கூடிய அந்த கடினமான நாட்களை நாம் கடப்பதற்கு அவரை சரண் அடைவதை தவிர்த்து வேறு வழியே இல்லை.
சனி பகவான் கொடுக்கக்கூடிய துன்பங்களை தாங்கிக் கொண்டு அவரை முழு பக்தியோடு சரணடைந்தவர்களை அவர் ஒருபொழுதும் கைவிடுவதில்லை என்பதற்கு உதாரணமாக நிறைய சான்றுகள் புராணங்களில் இருக்கிறது.
ஆக, சனி திசை நடப்பவர்கள் அல்லது சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை அன்று இந்த நான்கு விஷயங்களை செய்வதால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களை பெறலாம் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பரிகாரங்கள்:
1. இந்து மதத்தில் அரச மரம் என்பது புனிதமாக போற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சனிக்கிழமை தோறும் அரச மரத்தை ஏழுமுறை சுற்றி வந்து "ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரெளம் ஷ ஷனேஸ்வராய நமஹ" சனிபகவானுக்கு உரிய இந்த மந்திரத்தை சொல்லி வர நமக்கு சனி பகவானால் ஏற்படக்கூடிய கஷ்டங்களும் தோஷமும் விலகுகிறது.
2. மேலும் சனிக்கிழமைகளில் சனிபகவானின் அருளைப் பெற அரச மரத்தடியில் கருப்பு எள், கருப்பு வஸ்திரம் கடுகு எண்ணெய் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்யலாம். இந்த வழிபாடுகளும் நமக்கு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

3. சனிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் அரச மரத்தடியில் கடுகு எண்ணெயில் விளக்கேற்று வழிபட்டாலும் சனிபகவானால் ஏற்படக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம். அதோடு "ஓம் சனி ஷனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரித்து விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு சனி பகவானின் தாக்கங்கள் குறைந்து நல்ல வாழ்க்கையை பெற முடியும்.
4. சனிக்கிழமை தோறும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு அரச மரத்தடிக்கு சென்று மனதார சனி பகவானை நினைத்து வழிபாடு செய்து அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தால் நம்முடைய தோஷங்கள் பாவங்கள் அனைத்தும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |