பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை

Bakthi
By Sakthi Raj Apr 06, 2024 04:32 PM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

யாருக்கு தான் எதிரிகள் தொல்லை இல்லை. எதிரிகள் இருந்தால் தான் நம் வாழ்க்கையில், அவர்கள் முன் நல்லபடியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முனைப்போடு வாழ்வோம்.

உண்மையில் எதிரிகள் என்று ஒருவர் இல்லை என்றால், நம் வாழ்க்கை சுவாரசியம் அற்றதாக இருக்கும்.

ஆனால் அளவு கடந்து ஒரு எதிரியின் தொல்லை போகும் பொழுது, நம்மை முழு துயரத்தில் ஆழ்த்தி நம் குடும்ப சந்தோஷம் கெடும் பொழுது செய்வதறியாது நிற்கும் வேளையில் நாம் வணக்கவேண்டியவள் அய்யாவாடியில் கோயில் கொண்டு இருக்கும் பிரத்யங்கர தேவி.

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை | Prathiyangaradevi Kumbakonam Devidarisanam

கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பளியப்பன் கோவிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அய்யாவாடி தலம் அமைந்துள்ளது.

இக்கோயிலின் இறைவன் திருப்பெயர் அகத்தீஸ்வரர் ,இறைவியின் திருப்பெயர் தர்மசம்வர்தினி.

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை | Prathiyangaradevi Kumbakonam Devidarisanam

இக்கோயிலை சுற்றிலும் முழு சுடுகாடு.மேலும் இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை நிகும்பலா யாகம் என்று ஒரு யாகம் நடக்கிறது.

அந்த யாகத்தில் மிளகாய் வத்தலை குண்டத்தில் கொட்டுகிறார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும்.

 ஆனால் நிகும்பலா யாகத்தில் மூட்டை மூட்டையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது.

இந்த கலியுகத்தில் அந்த சம்பவம் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் கொடுக்கக் கூடியதாக அமையக்கூடும்.

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை | Prathiyangaradevi Kumbakonam Devidarisanam

மேலும், அந்த யாகத்தில் 108 வகை ஹோம சாமான்களை குண்டத்தில் போடுகிறார்கள். அதில் பட்டுப் புடவை, பழ வகைகள் அடங்கும்.

யாகம் முடிந்ததும் புனித கலச நீரினால் சரபேஸ்வரருக்கும் பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

கூடுதல் விஷேசம் என்னவென்றால் சனி பகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்குகொள்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்யங்கரா தேவி அருள் பெறுகின்றனர்

பிரித்யங்கரா தேவிக்கு மேல் மந்திரமும் தெய்வமும் இல்லை | Prathiyangaradevi Kumbakonam Devidarisanam

அதர்வண பத்ரகாளியான மகா பிரத்தியங்கிரா தேவிக்கு இங்கு மட்டுமே கோயில் உள்ளது. எதிரிகள் பயம், கடன் தொல்லை, பில்லி, சூனியம், உத்தியோக உயர்வு வேலை உயர்வு கிடைப்பதற்கும் பல கோடி செல்வம் பெறுவதற்கும் இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.

பிரித்தியங்கரா தேவிக்கு மேல் எந்த மந்திரமும் தெய்வமும் இல்லை என அதர்வண வேதம் கூறுகிறது. இத்தனை சக்திவாய்ந்த தேவியை நம் வழிபட்டு அவளுடைய அருளை பெறுவோம்.                     

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US