உங்கள் ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் உள்ளார்? வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
ஜோதிடத்தில் சந்திர பகவான் நம்முடைய மனதையும் தாயையும் குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த வகையில், சந்திரன் அமர்ந்திருக்க கூடிய வீடுகளை பொறுத்து நமக்கு பலன்கள் மாறுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. ஒருவருக்கு லக்னத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு முக வசீகரமும் சிறந்த ஆற்றலும் இருக்கும். இருப்பினும் முடிவெடுப்பதில் குழப்பம் சந்திப்பார்கள்.
2. ஒருவருக்கு சந்திரன் இரண்டாம் பாவத்தில் இருந்தால் அவர்களுக்கு குடும்பத்தினர் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் ஜாதகர் பேச்சில் சில தடுமாற்றத்தை சந்திப்பார்.

3. ஒருவருக்கு மூன்றாம் பாவத்தில் சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு பயணங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். முயற்சிகளில் சில தடுமாற்றம் வரலாம். மீடியா இசைத்துறையில் வெற்றி பெறுவார்கள்.
4. ஒருவருக்கு நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு வீடு மனைவி சொத்து வாங்கும் அமைப்பு மிகப்பெரிய அளவில் கிடைக்கும்.
5. ஐந்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் இவர்களுக்கு பூர்வ புண்ணிய அனுகிரகம் அதிகம் உண்டு. காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.
6. ஒருவருக்கு ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு கடன் நோய், வம்பு வழக்கு இல்லாமல் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.
7. ஒருவருக்கு ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு அழகான வாழ்க்கை துணை அமையும். அன்பும் காதலும் அதிகம் கொண்டிருப்பார்கள்.

8.ஒருவருக்கு எட்டாம் பாவத்தில் சந்திரன் அமைந்திருந்தால் அவர்களுக்கு தாயாருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். இவர்களுக்கு வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும்.
9.ஒருவருக்கு ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் அமைந்திருந்தால் இவர்களுக்கு தெய்வ அனுகூலம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வார்கள்.
10. ஒருவருக்கு பத்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகர் தொழிலில் வெற்றியை குவிப்பார். உணவு மற்றும் பால் சார்ந்த துறையில் இவர்களுக்கு வெற்றி உண்டு.
11. பதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் இவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் இருக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
12. ஒருவருக்கு 12ஆம் பாவத்தில் சந்திரன் இருந்தால் இவர்களுக்கு அயன சகன போக சுகத்தில் ஒரு சில குழப்பங்களை கொடுக்கலாம். தாயாருடன் மன வருத்தம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |