2 கிரகங்களின் மாற்றம்- எதிர்பாராத பண வரவை பெரும் ராசிகள் யார்?

Report

மே 13 முதல் மூன்று நாட்களுக்கு செவ்வாய் சந்திரனுக்குள் பெயர்ச்சி ஆக போவதால் விபரீத ராஜயோகம் நடக்க உள்ளது. இந்த யோகம், சந்திரனின் கடக ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், செவ்வாயின் விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதாலும் உருவாகும் யோகம் ஆகும். இதனை அடுத்து குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பெரிய மாற்றமும் அதிசயமும் நடக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

தொடர் தோல்விகளா? ஒரு முறை கும்பகோணத்தில் இந்த கோயில்களுக்கு சென்று வாருங்கள்

தொடர் தோல்விகளா? ஒரு முறை கும்பகோணத்தில் இந்த கோயில்களுக்கு சென்று வாருங்கள்

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி வாழ்க்கையில் மிக பெரிய மாற்றமும் மகிழ்ச்சியும் கொடுக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் மனதில் தெளிவு பிறக்கும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். கடன் வாங்கியவர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடும் யோகம் உருவாகும்.

கன்னி:

கன்னி ராசிக்கு இந்த காலகட்டத்தில் எடுக்கும் சிறிய முயற்சிகளும் பெரிய லாபத்தை கொடுக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்யும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். மனதில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் விலகும். வேலை மாற்றம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கொடுக்க உள்ளது. பொருளாதார நெருக்கடிகள் உங்களை விட்டு அகலும். உங்களை பற்றி புரிந்து கொள்வார்கள். பிரிந்து சென்ற உறவு உங்களை தேடி வரும். வேலையில் உங்கள் திறமை வெளிப்படும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சம்பளத்தில் உயர்வை கொடுக்க உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதையும் ஆலோசனை செய்து செய்வதால் நன்மை உண்டாகும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US